டெல்லி: முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் மற்றும் முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா ஆகியோருக்கு மத்திய அரசு ஆளுநர் பதவி வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல கேளரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநரையும் மாற்றி குடியரசு தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் ராஜினாமா செய்துள்ளார். எனவே அவருக்கு பதிலாக மிசோரம் ஆளுநராக உள்ள ஹரிபாபு ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், மிசோரம் ஆளுநராகவும், முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பீகாருக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதேபோல பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கேரளாவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.