சென்னை: உயர்ந்த சாதியினர் மட்டும் தான் உள்ளே வரனும் மற்ற சாதிக்காரர்கள் உள்ளே வரக்கூடாது என்று எந்த இறைவன் சொல்லுவார். வைணவ ஆகமம் சாதி அடிப்படையிலானது. ஜீயர், பட்டாட்சியர், மடாதிபதிகள் இவர்கள் எல்லாம் அவர்களது சாதியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இதனால் அவங்களை மட்டும் தான் உள்ளே விடுவார்கள். ஆனால் எந்த சாதிக்காரர்கள் காசு கொடுத்தாலும் அவங்க வாங்கிக்கொள்வார்கள் என்று சைவ பேரவ தலைவர் கலையரசி கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற இசைஞானி இளையராஜாவை கோவில் கருவறை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும், ஜீயர் மட்டுமே உள்ளே கருவறைக்கு சென்றார் என்றும் தகவல் பரவியது. மேலும் இதனால் கருவறைக்கு செல்ல முயன்ற இளையராஜா வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்ததாக தகவல் பரவியது.
இந்த நிலையில் சைவ பேரவ தலைவர் கலையரசி ஒன் இந்தியா தமிழுக்கு இந்த விவகாரம் பற்றி கூறியதாவது:-
வைணவர்களுக்கு என்று தனி ஆகம விதி உள்ளது. நாங்கள் சைவர்கள். எங்களது சைவ கோவில்களுக்கு என்று ஒரு தனி ஆகமம் இருக்கிறது. அவர்களது ஆகமம் சாதி அடிப்படையிலானது. ஜீயர், பட்டாட்சியர், மடாதிபதிகள் இவர்கள் எல்லாம் அவர்களது சாதியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இதனால் அவங்களை மட்டும் தான் உள்ளே விடுவார்கள். ஆனால் எந்த சாதிக்காரர்கள் காசு கொடுத்தாலும் அவங்க வாங்கிக்கொள்வார்கள்.
இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை விளக்கம் அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி இந்து அறநிலையத்துறை ”அர்த்த மண்டபத்திற்குள் மற்றவர் செல்லும் வழக்கமில்லை. அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டே அர்த்த மண்டபத்திற்கு முன்பு நின்று இளையராஜா சாமி தரிசனம் செய்தார்” என்று கூறியுள்ளது.
இதற்கிடையே இசைஞானி இளையராஜாவே இதற்கு விளக்கம் அளித்து இருந்தார். அவர் கூறுகையில், என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
எனினும், இளையராஜாவை தடுத்தது ஏற்க முடியாதது என்றும், அவருக்கு விதிகளை மீறி வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் இருவேறு கருத்துக்கள் பரவி பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. இந்த நிலையில் தான் உயர்ந்த சாதியினர் மட்டும் தான் உள்ளே வரனும் மற்ற சாதிக்காரர்கள் உள்ளே வரக்கூடாது என்று எந்த இறைவன் சொல்லுவார் என்பது தான் தெரியவில்லை என சைவ பேரவ தலைவர் கலையரசி ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேகமாக தொலைபேசியில் கூறினார். கலையரசி கூறியதாவது:-
வைணவர்களுக்கு என்று தனி ஆகம விதி உள்ளது. நாங்கள் சைவர்கள். எங்களது சைவ கோவில்களுக்கு என்று ஒரு தனி ஆகமம் இருக்கிறது. அவர்களது ஆகமம் சாதி அடிப்படையிலானது. ஜீயர், பட்டாட்சியர், மடாதிபதிகள் இவர்கள் எல்லாம் அவர்களது சாதியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இதனால் அவங்களை மட்டும் தான் உள்ளே விடுவார்கள். ஆனால் எந்த சாதிக்காரர்கள் காசு கொடுத்தாலும் அவங்க வாங்கிக்கொள்வார்கள்.
சாதி அடிப்படையில் தான் அங்கு ஆகமம் விதி உள்ளது. பரிவட்டம் கட்டுவது எல்லாம் வெளியில் வைத்து தான். இந்து சமய அறநிலையத்துறை என்ன பண்ணும் என்றால் அவங்க சொல்வதை கேட்டுக்கொண்டு கிளிப்பிள்ளை சொல்வது போல தான் சொல்வாங்க. ஆகமத்துக்கு உள்ளே எல்லாம் அவர்களாலும் போக முடியாது.
உயர்ந்த சாதியினர் மட்டும் தான் உள்ளே வரனும் மற்ற சாதிக்காரர்கள் உள்ளே வரக்கூடாது என்று எந்த இறைவன் சொல்லுவார் என்பது தான் தெரியவில்லை. எங்களது இறைவன் சிவபெருமான் எல்லாம் இப்படி சொல்லியது இல்லை. சிதம்பரம், திருவண்ணாமலை போன்ற கோவில்களில் எல்லாம் இப்படித்தான் அதிகாரம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களிடம் விழிப்புணர்வு வர வேண்டும். அப்போது தான் திருந்த முடியும்.
அரசாங்கத்துக்கு எல்லா அதிகாரமும் உண்டு. ஆனால் அவர்களால் கோவில் உள்ளே வர முடியாது. ஜனநாயக நாடு என்பதால், ஓட்டு பாதிக்கப்பட்டு விடும். ஆட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். எந்த ஆட்சி வந்தாலும் இப்படித்தான். அரசாங்கத்திற்கு தைரியம் இருந்தால் தலையிடலாம். ஆட்சி வேண்டும், ஓட்டு வேண்டும் என்று நினைத்தால் இப்படி நடக்கும். நீதி தான் நியாம் தான் என்றால் இதனை செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.