சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதல் பாகம் அடுத்த மாதம் முடிவுக்கு வரும் என்ற தகவல்கள் பரவி வருகிறது.
அதைத்தொடர்ந்து விரைவில் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது என்று கூறப்படுகின்றனர்.
இந்த சீரியலில் தனம் கேரக்டரில் நடித்த சுஜிதா சம்பள விஷயத்தில் பிரச்சனை செய்ததாக கூறப்பட்ட நிலையில் அவரை தொடர்ந்து கதிரும் பிரச்சனை செய்து வருவதாக செய்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட இந்த சீரியல் 5 வருடங்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்று தகவல்கள் வெளியானதை தொடர்ந்து சீரியலின் ரசிகர்கள் அதிகமானோர் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.
அதே நேரத்தில் ஒரு சிலர் அப்பாடா இந்த சீரியலை சீக்கிரமாக முடித்து விடுங்கள் என்று கருத்துக்களை வெளியிட்டு வருவதும் காண முடிகிறது. காரணம் சமீப காலமாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதை ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சுவாரஸ்யமாக இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் தான் கடந்த வார டிஆர்பி யின் அளவில் கூட பாண்டியன் ஸ்டோர் சீரியல் பத்தாவது இடத்திற்கு வந்திருந்தது.
அதேபோல சீரியலில் இப்போது விறுவிறுப்பு கூடி இருப்பதால் இனி வரும் வாரத்தில் டிஆர்பி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல இதுவரைக்கும் இத்தனை வருடங்களாக கதை தொடங்கி இருந்தாலும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இதனால் இந்த சீரியலில் இரண்டாவது சீசனாக தொடரலாம் என்ற யோசனை சேனல் தரப்பில் இருந்ததாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தான் சில வாரங்களுக்கு முன்பு இந்த சீரியலில் பல வருடங்களாக நடிக்கும் நடிகை சுஜிதா தனம் டைரக்டரில் நடித்து வரும் நிலையில் அவர் சீரியலை விட்டு விலகப் போவதாக சொன்னதாகவும் அதற்கு சீரியல் தரப்பில் இருந்து அவரிடம் சமரசமாக பேசி சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகவும் தகவல்கள் வைரலாகி வந்தது. இதைத்தொடர்ந்து இப்போது இந்த சீரியலில் இரண்டாவது பாகத்தில் கதிர் கேரக்டரில் நடிக்கும் குமரன் தான் நடிக்கப் போவதில்லை என்று பிரச்சனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. காரணம் நடன கலைஞராக பலருக்கும் பரீட்சையமாகி இருந்த நடிகர் குமரன் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கதிர் கேரக்டர் மூலமாக தான் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து இருந்தார். இந்த நிலையில் இந்த சீரியலை தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களிலும் வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கிறது.
இந்த நிலையில் இவர் சீரியலை விட்டு விலகுவாரா என்று அவருடைய தீவிரமான ரசிகர்கள் கேள்வி எழுப்பு வருகிறார்கள். ஆனாலும் இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் சீரியலில் கதை முடிவுக்கு வந்த பிறகுதான் இரண்டாவது பாகத்தை பற்றிய உறுதியான தகவல்கள் தெரியவரும்.