சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் .

post-img

சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சித்து வருவதாக, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெறுகிறது. இதற்காக ஜூன் 24ஆம் தேதி 4 நாட்களுக்கு கனகசபை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தீட்சிதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர், கோயில் விதிப்படி மேலாடையை கழற்றிவிட்டு கனகசபை படிக்கட்டுகளில் ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்றினர். எனினும் பக்தர்கள் கனகசபை மீது ஏற தீட்சிதர்கள் அனுமதியளிக்கவில்லை.

 

இதையடுத்து 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்த போதிலும் தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் என இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யவதற்கான தடை 4வது நாளாக தொடர்கிறது.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் அதிகார மையத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். கோயிலை தங்களது சொந்த நிறுவனம் போல் பாவித்து வருகின்றனர். அதை அரசு தட்டிக் கேட்கிறது என்று தெரிவித்தார்.

நடராஜர் கோயிலில் உண்டியல் இல்லை எனவும், வைப்பு நிதி, நகை போன்றவை எவ்வளவு உள்ளது போன்ற எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

மேலும், பொதுமக்கள், பக்தர்களின் எண்ணப்படி சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுப்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வருகிறோம். நடப்பது சட்டத்தின் ஆட்சி என்பதை விரைவில் தீட்சிதர்களுக்கு நிரூபிப்போம் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே,  சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது பக்தர்கள் ஏறக்கூடாது என்ற பதாகையை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றிய போதும், 4வது நாளாக தடை நீடிக்கிறது.

Related Post