திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே சுடுகாட்டில் மணல் கொள்ளையர்கள், 7 பேரின் சடலங்களுடன் சேர்த்து மணலை அள்ளிச் சென்றதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, பூத்தாம்பட்டி அருகே ஏ.டி.காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (50), கற்பகம்(45). இந்த தம்பதியினரின் மகன் விஸ்வநாதன்(19), இவர் மாற்றுத்திறனாளி. இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இறந்துள்ளார். இந்த நிலையில் அவரின் சடலத்தை புதைப்பதற்காக புத்தாம்பட்டியில் உள்ள சுடுகாட்டிற்கு உறவினர்கள் சென்றுள்ளனர்.
அங்கு சென்று பார்த்தபோது தங்கள் முன்னோர்கள் ஏழு பேரின் சடலங்களை, மணல் கொள்ளையர்கள் மணலுடன் சேர்த்து அள்ளிச் சென்றுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி இன்று சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தமிழகத்தில் ஆங்காங்கே மணல் கொள்ளை நடந்து வருகிறது. அந்த வகையில் சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடக்கும் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது . தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதாவது தமிழகத்தை சேர்ந்த எம் . அழகர்சாமி என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது . தமிழகம் , பஞ்சாப் , மத்திய பிரதேசம் , மகாராஷ்டிரா , ஆந்திர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த நோட்டீஸ் போயுள்ளது. இந்த 5 மாநிலங்களில் நடக்கும் சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தவும் அவர் கோரியுள்ளார்.
இந்த மணல் கொள்ளை பிரச்னை என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் மாபியாக்களின் கொட்டமும் ஏற்படுகிறது. இது எல்லாவற்றையும் விட அரசுக்கு பல கோடி கணக்கிலான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. குறிப்பிட்ட அளவுக்கு லைசென்ஸ் பெற்று மணல் கொள்ளையர்களுக்கு கொடுக்கப்பட்ட லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது .
Weather Data Source: Wettervorhersage 21 tage