திடீரென சென்னைக்கு வந்த மேனகா காந்தி.. நேரில் வரவேற்ற எஸ்ஏ சந்திரசேகர் - ஷோபா? அலர்ட் ஆன உளவுத்துறை

post-img
சென்னை: பாஜகவை சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி திடீர் பயணமாக சென்னை வந்திருக்கிறார். அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் பெற்றோர் எஸ்.ஏ சந்திரசேகர் - சோபா சந்திரசேகர் வரவேற்று அழைத்துச் சென்றதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் உளவுத் துறைக்கு சென்றிருக்கும் நிலையில், அவர்கள் இது குறித்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மருமகளும், மறைந்த சஞ்சய் காந்தியின் மனைவியுமான மேனகா காந்தி பாஜகவில் இருக்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ராம் நிஷாத் இடம் தோல்வி அடைந்தார். கடந்த பாஜக ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த அவர் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி அடைந்ததால் சற்று அரசியலில் இருந்து தள்ளி இருக்கிறார். இந்த நிலையில் திடீர் பயணமாக அவர் சென்னை வந்திருக்கிறார். இதில் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் அவரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகரும், சோபா சந்திரசேகரும் வரவேற்று அழைத்துச் சென்றிருக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜய் அரசியலில் குதித்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநில மாநாட்டில் விஜய் கொள்கை எதிரி பாஜக என விமர்சித்து பேசி இருந்தால் மாநாட்டிலும் சரி, அதற்கு முன்பு நடைபெற்ற கொடி வெளியீட்டு விழா நிகழ்ச்சியிலும் சரி அவரது பெற்றோர்களான எஸ்ஏ சந்திரசேகரும் சோபா சந்திரசேகரும் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டனர். கட்சியை பொறுத்தவரை எஸ்.ஏ சந்திரசேகருக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. ஆனால் விஜய் அரசியலுக்கு கொண்டுவர அதிக முயற்சி மேற்கொண்டவர் எஸ்.ஏ சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நலத் திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார் சந்திரசேகர். அதற்குப் பிறகு புதுச்சேரி புஸ்ஸி ஆனந்த் வருகையால் சந்திரசேகர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். விஜய் பேரில் அவரது பெற்றோரால் கட்சி பதிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என விஜய் கூறியதோடு. சட்ட ரீதியாகவும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் விஜய்க்கும் சந்திரசேகருக்கும் அவ்வளவாக நெருக்கம் இல்லை எனக் கூறப்படும் நிலையில் திடீரென பாஜகவை சேர்ந்த மத்திய முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீரென நேரில் சென்று வரவேற்று அழைத்துச் சென்றிருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது. அதற்கான காரணங்கள் இதுவரை இதுவரை வெளியாகாத நிலையில் இந்த தகவல் உளவுத்துறைக்கும் சென்றிருக்கிறது. மேனகா காந்திக்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் அரசியல் ரீதியாக எதுவும் தொடர்பு உள்ளதா? விஜய் அறிவுறுத்தலின் பேரில் அவரது பெற்றோர்களான சந்திரசேகரும் சோபா சந்திரசேகரும் மேனகா காந்தி வரவேற்று அழைத்துச் சென்றார்களா? என பல குழப்பங்கள் நிலவுகிறது. மேலும் இந்த தகவல் உளவுத் துறைக்கும் எட்டி இருக்கும் நிலையில் சந்திப்பு மற்றும் வரவேற்பிற்கு என்ன காரணம்? பின்னணி என்ன? என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Post