அடுத்த 1 வருடத்திற்கு.. பிரச்சனையே இல்லை! சென்னை மக்களுக்கு வந்த நல்ல செய்தி.. என்ன நடந்தது?

post-img

சென்னை: சென்னையில் 2 வாரமாக பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு அதிகரித்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளில் 67.74% நீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 7.964 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் - 78.05% நீர் இருப்பு உள்ளது.
புழல் - 84.42% நீர் இருப்பு உள்ளது.
பூண்டி - 56.02% நீர் இருப்பு உள்ளது.

சோழவரம் - 18.32% நீர் இருப்பு உள்ளது.
கண்ணன்கோட்டை - 65% நீர் இருப்பு உள்ளது.
சென்னையில் உள்ள மற்ற முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்:

500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 325 மில்லியன் கன அடியாக உள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2786 மில்லியன் கன அடியாக உள்ளது.
1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 198 மில்லியன் கன அடியாக உள்ளது.
மழை: சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 5% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த மழைக்கு இடையே சென்னைக்கு ஒரே ஒரு பெரிய நல்ல செய்தி கிடைத்துள்ளது.
அதன்படி சென்னை மாநகருக்கு தேவையான மழை நீர் கிடைத்துள்ளது. நகரின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 1,675 கனடியாக இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு 2,217 கன அடியாக உள்ளது. இதனால் அடுத்த ஒரு வருடத்திற்கு சென்னைக்கு தண்ணீர் பஞ்சமே இருக்காது.
இன்று வானிலை: சென்னை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நள்ளிரவு பரவலாக மழை பெய்துள்ளது. பெஞ்சல் புயலுக்கு பின் 3 நாட்களாக மழை பெய்யாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் நாகை, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காலை 10.30 மணி வரை நல்ல கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்பின் மழை கொஞ்சம் குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் பறநகர் பகுதிகளைத்தான வானிலை முன்னறிவிப்பு;
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில்
பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது வடகடலோர இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஊசில பாதிகளில் மிதமான பெய்யக்கூடும்.

Related Post