இந்திய மக்கள் ஏற்கனவே விலைவாசியால் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில், நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியவர்கள் அனைவரும் அதிகப்படியான வட்டியை தங்களுடைய ஈஎம்ஐ-யில் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூலை 15 ஆம் தேதி முதல் கடனுக்கான அடிப்படை வட்டி விகித்தை நிர்ணயம் செய்யும் MCLR விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்எளது. அடிப்படை புள்ளிகள் என்றால் 1/100 அதாவது 0.01 சதவீதம், தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளதன் மூலம் 0.05 சதவீதம் வட்டி விகிதம் உயர உள்ளது.
இதன் மூலம் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் MCLR விகிதம் 8 முதல் 8.75 சதவீதம் வரையில் உள்ளது, இதுதான் பல்வேறு கடனுக்கான குறைந்தப்பட்ச வட்டி விகிதம். இதை அடிப்படையாக வைத்து அனைத்து எஸ்பிஐ வங்கி நிர்வாகம் ஒருவரின் சிபில் ஸ்கோர், எந்த கடன் வாங்குகிறார் என்பதை பொறுத்து வட்டி விகிதம் மாறுப்படும்.
ஆர்பிஐ கடந்த நாணய கொள்கையில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை உயர்த்தாமல் தொடர்ந்து 6.50 சதவீதமாக வைத்திருந்தாலும், தற்போது STATE BANK OF INDIA வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளக்கிறது. எஸ்பிஐ வெறும் 0.05 சதவீதம் மட்டுமே உயர்த்தியுள்ளது என பலர் நினைக்கலாம், ஆனால் விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ள நேரத்தில் வீட்டு கடன் வாங்கிய ஒரு நடுத்தர குடும்பத்திற்கு EMI வாயிலாக கூடுதல் பணம் செலுத்தும் போது இது பெரும் சுமையாக தான் இருக்கும்.
இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் வாங்கியவர்கள் தங்களுடைய கடனுக்கான புதிய வட்டி விகிதம் என்ன..? புதிய ஈஎம்ஐ தொகை என்ன..? என்பதை உடனே செக் செய்யுங்கள்.