வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஹர்மன்பிரித் ஆட்டம் இழந்தார். ஆனால் நடுவர் அதற்கு தவறாக அவுட் வழங்கியதாக கூறி ஸ்டம்புகளை தனது பேட்ட ஹர்மன்பிரித் கவுர் அடித்தார்.
அதனுடன் நிற்காமல் பெவிலியன் செல்லும் வரை நடுவரை திட்டிக்கொண்டே ஹர்மன்பிரித் சென்றார். இந்த போட்டியில் இந்திய அணி டை செய்தது இதன் காரணமாக இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில் கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது. அப்போது ஹர்மன்பிரித் கவுர் வங்கதேச கேப்டனிடம் நீங்கள் மட்டும் ஏன் வந்திருக்கிறீர்கள் நடுவரையும் அழைத்து வாருங்கள், நடுவருடன் சேர்ந்து கோப்பையை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
இந்த பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வங்கதேச கேப்டன் சுல்தானா, பரிசு வழங்கும் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலே வெளிநடப்பு செய்தார்.இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. ஹர்மன்பிரித் நடவடிக்கை சரி இல்லை என இந்திய ரசிகர்களுமே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ஹர்மன்பிரித் கவுருக்கு முதலில் போட்டியிலிருந்து 75% அபராதமாக விதிக்கப்பட்டது.
ஆனால் இது மிகவும் குறைவான தண்டனை என அனைவரும் கூறிய நிலையில் தற்போது அவர் இரண்டு போட்டிகளில் பங்கேற்க ஐசிசி தடை விதித்துள்ளது. இதன் மூலம் ஹர்மன் பிரித் கவுர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்திய மகளிர் அணி செப்டம்பர் 23ஆம் தேதி சீனாவில் தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
இந்த தொடருக்கு ஹர்மன் பிரித் கவுர் தான் கேப்டனாக செயல்படுவார். ஆனால் தற்போது இரண்டு போட்டிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் அந்த தொடரில் களமிறங்க முடியாது நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தவறான நன்னடத்தை காரணமாக இரண்டு போட்டிகளில் தடை வாங்கிய முதல் வீராங்கனை என்ற சோகமான சாதனையை ஹர்மன்பிரித் பெற்றிருக்கிறார்.