காங்கோ: காங்கோவில் தீவிரமாக பரவி வரும் வினோத நோய் உலக சுகாதார மைய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. இதையடுத்து நேரடியாக களத்திற்கே சென்று சுகாதார ,மைய அதிகாரிகள் ஆய்வுகளை செய்து வந்தனர். ஒரு மாதம் ஆகியும் இந்த நோய் பற்றி உலக சுகாதார மையத்திற்கு எதுவும் தெரியவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் அந்த நோய் என்ன.. எப்படி பரவுகிறது.. ஏன் மிக மோசமான பின்விளைவுகளை, மரணங்களை பதிவு செய்கிறது என்ற காரணம் வெளியாகி உள்ளது.
பரவும் நோய்: காங்கோவில் பெயர் அறியப்படாத மர்ம நோய் ஒன்று பரவி வந்தது. கடந்த 15 நாட்களுக்குள் இந்த நோய் 155 பேரைக் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, சளி, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக காங்கோவில் உள்ள குவாங்கோ மாகாணத்தின் துணை ஆளுநரான ரெமி சாகி மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் அப்பல்லினேர் யூம்பா ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
200க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர்களின் எச்சில் மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து நோயை அடையாளம் காண ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அறிகுறிகள்: பொதுவாக கிளைமேட் மாறுவதால் ஏற்படும் சீசன் காய்ச்சல் ஏற்படும். அது போல இந்த னாய் ஏற்பட்டு வருகிறது. இது காய்ச்சல் போல இருந்தாலும் காய்ச்சல் இல்லை என்று கூறப்படுகிறது. சிலருக்கு மருந்து எடுத்தாலும் குணமாகவில்லை என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு,
சளி,
இருமல்,
அதிக காய்ச்சல்,
உடல்வலி,
தலைவலி,
தும்மல்,
மூக்கு அடைப்பு ,
தொண்டை புண்,
கண்களில் நீர் வடிதல்,
மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் பலருக்கும் காய்ச்சல் ஏற்படுகிறது. சாதாரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு இது இயல்பு வாழ்க்கையை முடக்கும் விதமாக அமைந்து உள்ளது.
சிலருக்கு இந்த காய்ச்சல் போனதும் மீண்டும் 1 வாரத்தில் வருகிறது. சிலருக்கு 1 வாரம் கூட இந்த காய்ச்சல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு பலரும் செல்கிறாரக்ள். அதாவது அவ்வளவு எளிதாக இந்த காய்ச்சல் குணமாவது இல்லை.
உலக சுகாதார மையம் அறிக்கை: காங்கோவில் தீவிரமாக பரவி வரும் காணப்படாத நோய் பற்றிய விரிவான விளக்கத்தை உலக சுகாதார மையமான WHO வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நோய் மலேரியாதான் என்று கண்டுபிடித்து உள்ளனர்.
இது மலேரியாதான் ஆனால்.. நோய் பாதித்த பலருக்கும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. இரண்டும் சேர்ந்த காரணத்தால் உடல்நிலை மோசமாக இவர்களுக்கு பாதித்து இருக்கலாம். அதாவது கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு + மலேரியா + ஏற்கனவே இருந்த இணை நோய்கள் காரணமாக மரணம் ஏற்பட்டு இருக்கலாம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
• கேஸ்கள் மற்றும் இறப்புகள்: 406 சந்தேகத்திற்கிடமான நோய் பாதிப்புகள் பதிவாகி உள்ளன, 143 இறப்புகள் (100 சுகாதார மையங்களில், 43 வீட்டில்)
• மக்கள்தொகை: பெரும்பாலான கேஸ்கள் குழந்தைகளை தாக்கி உள்ளது. அனைத்து கடுமையான கேஸ்கள்களும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களை அதிகம் தாக்கி உள்ளது.
• எப்போது தொடக்கம்: அக்டோபர் 24 அன்று முதல் கேஸ் பதிவானது. நவம்பர் தொடக்கத்தில் கேஸ்கள்உச்சத்தை எட்டியதாகத் தெரிகிறது ஆனால் பரவல் இன்னும் தொடர்கிறது.
• காரணங்கள்: கடுமையான நிமோனியா (சுவாசப் பாதை தொற்று), இன்ஃப்ளூயன்ஸா, கோவிட்-19, தட்டம்மை, ஈ.கோலி மற்றும் மலேரியாவிலிருந்து வரும் ஹீமோலிடிக் யூரிமிக் சிண்ட்ரோம், ஊட்டச் சத்து குறைபாடு ஆகியவை பங்களிக்கும் காரணியாகும்.
• ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம்.