லஞ்சம் கேட்ட போலீஸ்.. பெங்களூர் நைஸ் ரோட்டில் லாரியை நிறுத்தி டிரைவர் செய்த சம்பவம்.. அலறிய மக்கள்

post-img
பெங்களூர்: பெங்களூர் நைஸ் ரோட்டில் லாரி டிரைவரிடம் ரூ.2,000 லஞ்சம் கேட்டு போலீஸ் டிரைவரை தாக்கி உள்ளார். பெங்களூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கர்நாடகா அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இப்படியான சூழலில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ பெங்களூர் நைஸ் ரோட்டில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை காட்டுகிறது. அதாவது பெங்களூரில் இருந்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக நைஸ் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் தினமும் பல ஆயிரம் லாரிகள் சென்று வருகின்றன. பெங்களூரில் முக்கிய ரோடாக இந்த நைஸ் ரோடு உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று எலக்ட்ரானிக் சிட்டி அருகே கோனப்பன அக்ரஹாராவில் உள்ள நைஸ் ரோட்டில் இருந்து சந்தாபுரா வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் லாரி டிரைவர் லாரியை ரோட்டின் குறுக்காக விட்டு சென்றது தான். இது அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த வீடியோவை எடுத்தவர் பின்னணியில் பேசுகிறார். அதில் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு லாரி டிரைவர் காரணமில்லை. போலீஸ்காரர் தான் காரணம். லஞ்சப்பணம் தான் காரணம் என்கிறார். இதுதொடர்பாக அந்த நபர், ‛‛ பெங்களூர் நைஸ் ரோட்டில் சென்ற லாரி டிரைவரிடம் ரூ.2 ஆயிரத்தை போலீஸ்காரர் லஞ்சமாக கேட்டு பிடுங்கி உள்ளதோடு, டிரைவரை தாக்கி உள்ளார். இதனால் லாரி டிரைவர் லாரியை சாலைக்கு நடுவே நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். இதனால் சந்தாபுரா மற்றும் பொம்மச்சந்திரா வரை பல கிலோமீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன'' என்று கூறியுள்ளார். இருப்பினும் அந்த வீடியோ எந்த தேதியில் எடுக்கப்பட்டது என்பது பற்றி தெரிவிக்கவில்லை. இருப்பினும் வீடியோவை பார்க்கும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பொதுமக்கள் தங்களின் வாகனங்களை விட்டு இறங்கி வருவதும், பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கவலையில் இருப்பதும் தெரிகிறது. இந்த வீடியோவை தற்போது பலரும் தங்களின் வலைதளங்களில் பதிவிட்டு போலீசாரின் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Related Post