5 மாநில தேர்தல்களில் எந்த கட்சி.. எங்கே ஆட்சியை பிடிக்கும்? எங்கே தொங்கு சட்டசபை?

post-img

சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த கருத்து கணிப்பில் எந்த கட்சி எந்த மாநிலங்களை வெல்லும், எங்கே தொங்கு சட்டசபை உருவாகும் என்று கணிப்பு வெளியாகி உள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடந்தது. சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. தெலுங்கானா தேர்தல் இன்று நடந்தது.
இதையடுத்து வருகின்றன டிசம்பர் 3ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன. அதற்கு முன் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.
கணிப்புகள் சொல்வது என்ன?: ஓவர் ஆல் கணிப்பு படி - ராஜஸ்தானில் காங்கிரஸ் 75-91, பாஜக 98-114, மற்றவை 9-16 இடங்களில் வெல்லும். - அதாவது பாஜக ஆட்சி அமைக்கும். அங்கே உள்ள 200 இடங்களில் 101 இடங்களில் மெஜாரிட்டி பெற வெல்ல வேண்டும்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 93-106 பாஜக 120-134மற்றவை 1-5 இடங்களில் வெல்லும். - அதாவது பாஜக ஆட்சி அமைக்கும். இங்கே 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும்
சத்தீஸ்கரில் காங்கிரஸ் 46-55 பாஜக 33-42 மற்றவை 1-5 இடங்களில் வெல்லும். - அதாவது காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். அங்கே உள்ள 90 இடங்களில் 46 இடங்களில் மெஜாரிட்டி பெற வெல்ல வேண்டும்.
தெலுங்கானாவில் பிஆர்எஸ் 44-50 காங்கிரஸ் 56-62 பாஜக 5-7 இடங்களில் வெல்லும். - அதாவது காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். அங்கே உள்ள 119 இடங்களில் 60 இடங்களில் மெஜாரிட்டி பெற வெல்ல வேண்டும்.
மிசோராமில் - எம்என்எப் 14-19, சோபிஎம் - 11-17, காங்கிரஸ் 6-10, பாஜக 1- 2 இடங்களில் வெல்லும். - அதாவது தொங்கு சட்டசபை உருவாகும். அங்கே உள்ள 40 இடங்களில் 21 இடங்களில் மெஜாரிட்டி பெற வெல்ல வேண்டும்.
மொத்த கணிப்பு; மொத்த கணிப்புப்படி மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பாஜக தக்க வைக்கும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து பாஜக அங்கே வெற்றிபெறும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சட்டீஸ்கர், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன. மிசோரத்தில் இழுபறி ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அரையிறுதி தேர்தல்: இந்த தேர்தல் கிட்டத்தட்ட அரையிறுதி தேர்தல் போல பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது.
இதில்தான் 50- 50 வெற்றியை காங்கிரஸ் - பாஜக வெல்லும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதாவது மத்திய பிரதேசம், ராஜஸ்தானை பாஜகவும், தெலுங்கானா, சத்தீஷ்கரை காங்கிரசும் வெல்லும் என்று கணிப்புகள் தெரிவிகின்றன.
கேம் ஓவர்.. தெலங்கானாவில் கேசிஆருக்கு செக்! ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்! டைம்ஸ்நவ் கருத்து கணிப்பு
இதனால் லோக்சபா தேர்தலில் மோடிக்கு சவால் காத்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் 2 இந்தி மாநிலங்களில், அதாவது ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மிகவும் நெருக்கமான வெற்றியை பெறுகிறது. இன்னொரு பக்கம் சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியை பிடிக்க முடியாமல் போகிறது./ தென்னிந்தியாவில் ஏற்கனவே கர்நாடகாவை இழந்த பாஜக தெலுங்கானாவில் மிக மோசமான படுதோல்வியை சந்திக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன.
இதனால் லோக்சபா தேர்தலிலும் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்படுமா? மோடிக்கு அதிர்ச்சி தரும் தேர்தல் முடிவாக இது இருக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

 

Related Post