புத்தாண்டு பலன் 2025: புத்தாண்டு பிறக்கப் போகிறது. பல்வேறு புதுமைகளைத் தர காத்திருக்கும் இந்தப் புத்தாண்டு கடக ராசிக்காரர்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் விமோசனம் தரும் ஆண்டாக அமையப் போகிறது. இதுக்கில்லையா சார் ஒரு எண்டு என்று வருத்தப்பட்டவர்களுக்கு எல்லாம் இனி பலன்கள் கொட்டப் போகுது.. அந்த வகையில், கடக ராசிக்காரர்களுக்கு இந்தப் புத்தாண்டு என்னென்ன நற்பலன்களைத் தரப் போகிறது. எந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்... (Puthandu rasi palan for Kadagam)
கடக ராசிக்காரர்களே சொல்ல முடியாத கஷ்டங்களை கடந்த மூன்று வருடங்களாக பட்டிருப்பீர்கள். வெளியில் சிரித்தாலும், உள்ளே அழுது கொண்டிருந்திருப்பீர்கள். இதுக்கு ஒரு எண்டே இல்லையா என்பது போல் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு பெரிய விமோசன காலமாக இந்த 2025 புத்தாண்டு அமையப் போகிறது. (New year rasi palan 2025)
அஷ்டமத்தில் இருக்கக்கூடிய சனி பாதிப்பு, வக்கிர சனியுடைய பாதிப்பு, வக்கிர குருவுடைய பாதிப்பு என போட்டு உங்களை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கும். எதெல்லாம் சரியோ தப்பாக தெரியும். எதெல்லாம் தப்போ அதெல்லாம் நல்ல விஷயமாக உங்களுக்கு இப்போது தெரியும். அஷ்ட சனியின் பாதிப்பில் இருந்து ஒன்பதாம் இடத்துக்கு சனி போகும்போது சகலவித பஞ்சாயத்துகளும் உங்களுக்குத் தீர்ந்துவிடும்.
உடல் பாதிப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். மனக் கவலைகள், தூக்கமின்மை, கோபத்தில் இருந்து பொறுமையாக விலகுவீர்கள். ராகு எட்டாம் இடத்தில் வருவதால் வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நலனில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 60 வயதில் இருக்கக்கூடிய கடக ராசிக்காரர்கள் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது நல்லது.
யோகங்கள் உண்டாகும் - குரு பார்வை துலாம் மேல் விழுவதால் மாணவ, மாணவிகளுக்கு நன்மை பயக்கும். தாயாரின் உடல்நிலை நன்றாக இருக்கும். வீடு, மனை, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உடம்பு பாதிப்புகள் அனைத்தும் சரியாகும். புதிய கோர்ஸ்கள் படிப்பவர்களுக்கு அருமையாக இருக்கும். சுக்கிரன் சேர்வதால் டிசைனிங், ஃபேஷன், பெண்கள் சார்ந்த படிப்புகள் படிப்பது நன்மை பயக்கும்.
கடன்கள் தீரும் - ஆறாம் இடத்தை குரு பார்ப்பதால் கடன் பிரச்னைகள் தீரும். தெய்வ அனுகிரகம் உண்டாகும். ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தை தரும். வெண்ணெய் காப்பு, வெற்றிலை மாலை ஆஞ்சநேயருக்கு போடுவதால் அனுகூலம் உண்டாகும்.
தொழில் - விரைய ஸ்தானத்தில் குரு வருவதால் குழந்தைகளுக்கான புதிய புதிய முதலீடுகளைத் தொடங்குவீர்கள். இந்த முதலீடு உங்களுடைய பெரிய ஏற்றத்துக்கு கொண்டுபோகும். எட்டாம் இடத்தில் ராகு வருவதால் கன ரக வாகன தொழில் துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். டிரான்ஸ்போர்ட் துறை, கன இயந்திரங்கள் துறை, காப்பீடு, எமர்ஜென்சி பணிகளை மேற்கொள்ளக் கூடியவர்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை - கடக ராசிக்காரர்களைப் பொருத்தவரை பொய் பேசாமல் இருந்தாலே தெய்வத்தின் அனுகூலம் உண்டாகும். கேது என்பது பொய்யைப் பத்து மடங்காக்கிவிடும். அதனால், அதில் கவனம் செலுத்த வேண்டும். இதில் மறைமுகமான நற்பலன்கள் என்பது விரைய ஸ்தானத்தில் குரு உட்கார்ந்து புதனுடைய வீட்டில் இருப்பதாகும். நரம்பு, தோல், கால் பாதம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். மொபைல் பேங்கிங், பாஸ்வேர்டு ஷேர் செய்வது, ஆன்லைன் திருட்டில் சிக்குவது போன்றவை ஏற்படும்.
பரிகாரங்கள் - இரண்டாம் இடத்தில் கேது இருப்பதால் குடும்பத்தில் பிரிவு ஏற்படும். கடகத்தில் இரண்டாம் இடத்தில் சனி, கேது அமர்ந்திருக்கும்போது இரண்டாம் இடத்தில் வாக்கு, தனம், குடும்ப வாக்கு ஸ்தானம். இதில் கேது இருப்பதால் சட்ட சிக்கல்களை உருவாக்கும். கடகத்தில் சனி 9 ஆம் இடத்துக்கு போகும்போது தெய்வத்தின் அனுக்கிரகத்தில் நல்லது நடக்கும். குலதெய்வ கோயிலுக்கு நடைபயணமாகச் செல்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். கோயிலில் நெய் விளக்கு போடுவது, நெய் தானம் வழங்குவது நல்ல வெற்றியைத் தரும்.
கடகத்தைப் பொருத்தவரை அஷ்டம சனியின் பாதிப்புகளில் இருந்து வெளியில் வந்திருந்தாலும் ராகு கேதுக்களின் இடம் சரியாக இல்லை. ராகு எட்டாம் இடத்தில் அமர்ந்துள்ளதால் சில பேருக்கு ஆயுள் பாவத்தில் கண்டம் ஏற்படும். இரண்டாம் இடத்தில் கேது உட்காரும்போது குடும்பத்தில் பிரிவு ஏற்படும். திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தானரீஸ்வரர் கோயிலில் வழிபடுவது நல்லது.
Weather Data Source: Wettervorhersage 21 tage