தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக ராதிகா? பாஜக போடும் பக்கா பிளான்!

post-img

சென்னை: தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக சார்பாக கனிமொழி போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில், பாஜக நடிகை ராதிகா சரத்குமாரை களம் இறக்க ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. பெண் வாக்காளர்களை கவரும் விதமாக ராதிகா நிறுத்தலாம் என பாஜக மேலிடம் ஆலோசித்து வருகிறது.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை என்பதால் அரசியல் களம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு கிட்டதட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி தொகுதியில் தற்போது எம்பியாக இருக்கும் கனிமொழியே மீண்டும் போட்டியிட உள்ளார். தூத்துக்குடி தொகுதியில் திமுகவினர் யாரும் போட்டியிட முன்வரவில்லை. கனிமொழி ஒருவரே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். இதனால், திமுகவில் இன்னும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தூத்துக்குடியில் ராதிகா போட்டி?: கனிமொழி போட்டியிடுவதால் தூத்துக்குடி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. எனவே, தூத்துக்குடியில் கனிமொழியை வீழ்த்த வலுவான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அந்த வகையில், கனிமொழிக்கு எதிராக ராதிகா சரத்குமாரை நிறுத்த பாஜக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அண்மையில், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் சரத்குமார் இணைத்தார். ராதிகா பிரபலமான நடிகை என்பதால் பெண் வாக்காளர்களை கவரும் விதமாக அவரை நிறுத்துவது சரியாக இருக்கும் என்று பாஜக எண்ணுகிறதாம். இதனால், தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து ராதிகா நிறுத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ராதிகாவிடமும் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தமிழிசை சவுந்தரராஜன் கடந்த முறை கனிமொழி எம்பியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்ததால் இந்த முறை மக்களுக்கு அறிமுகமான நட்சத்திரமான நடிகை ராதிகாவை களமிறக்க பாஜக முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக சசிகலா புஷ்பாவை போட்டியிட வைக்கலாமா? என்றும் பாஜக யோசித்து வருவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. கோவையில் அண்ணாமலை போட்டி?: அதேபோல், அதிமுகவும் தூத்துக்குடியில் வலுவான வேட்பாளரை நிறுத்த ஆலோசித்து வருகிறதாம். கோவையில் அண்ணாமலை களம் இறங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலை போட்டியிடலாம் என்பதால்தான் கோவை தொகுதியை கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து பெற்ற திமுக, அண்ணாமலையை வீழ்த்த வலுவான வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டு வருகிறதாம்.

எடுத்துக்கோங்க.. ஆணிவேரையே விட்டுக்கொடுத்த எடப்பாடி.. பாமகவை இழுக்க.. மிகப்பெரிய ஆஃபர் அண்ணாமலை திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருவதால் அவர் போட்டியிடும் பட்சத்தில் எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என திமுக வியூகம் வகுத்து வருகிறதாம். அதே நேரத்தில், கொங்கு மண்டலத்தில் வெற்றிக்கொடியை நாட்ட பாஜகவும் தீவிரம் காட்டி வருகிறது. இதுபோக அதிமுகவும் தனதுசெல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

நீலகிரியில் எல் முருகன்: சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய இணை அமைச்சர் எல் முருகன், நீலகிரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருப்பதால் அரசியல் களம் கொதிக்க ஆரம்பித்துள்ளது.

 

Related Post