இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் வியாழக்கிழமை வெளியானது.
லாங் வீக்கெண்ட் என்பதாலும், போட்டிக்கு மற்ற எந்த படங்களும் ரிலீஸ் ஆகாத நிலையிலும், சோலோவாக இந்த வாரத்தை மாமன்னன் படம் தியேட்டர்களில் ஆட்சி செய்து வருகிறது.
ஆரம்பத்தில் பெரிதாக டிக்கெட் புக்கிங் இல்லாத நிலையில், வடிவேலு மற்றும் பகத் ஃபாசிலின் நடிப்பு பிரமாதம் முதல் பாதி சூப்பர் என குவிந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக படம் பாக்ஸ் ஆபிஸில் பிக்கப் ஆகி உள்ளது.
ஆதரவும் எதிர்ப்பும்: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்துக்கு பெருவாரியான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதன் பின்னர் அவர் இயக்கிய கர்ணன் படத்துக்கு ஒரு கூட்டம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், தற்போது வெளியாகி உள்ள மாமன்னன் படத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு சம அளவில் குவிந்து வருகிறது.
மாரி செல்வராஜ் வியாபார நோக்கத்திற்காக படத்தை பண்ணி உள்ளதாகவும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. சினிமாவின் நோக்கமே அதுதானே என்பது தான் நிதர்சனமான உண்மை.
அரசியல் சர்ச்சை: அரசியல் தெளிவில்லாமல் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்றும் மாரி செல்வராஜை தான் உதயநிதி ஏமாற்றி தனக்கான எதிர்காலத்துக்கான படமாக இதை உருவாக்கி உள்ளார் என்றும் ஏகப்பட்ட விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் திறந்தாலே கடந்த சில நாட்களாக காணக் கிடக்கின்றன.
அந்த விதத்தில் மாரி செல்வராஜ் படத்தின் ரிலீசுக்கு முன்பாக தேவர் மகனை சீண்டி ஒரு விளம்பர அரசியலையும் படத்திற்கு பின்னர் விவாத அரசியலையும் செய்து தனது படத்தை எப்படி கல்லா கட்டுவது என்கிற கலையில் தேர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
மாமன்னன் 3ம் நாள் வசூல்: உதயநிதி ஸ்டாலினை வைத்து அருண்ராஜா இயக்கிய நெஞ்சுக்கு நீதி, மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் போன்ற படங்கள் செய்ய முடியாத பாக்ஸ் ஆபிஸ் சாதனையை மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தின் மூலமாக நிகழ்த்திக் காட்டி உள்ளார்.
அதற்கு முக்கிய காரணம் வடிவேலுவின் அபாரமான நடிப்பு மற்றும் பகத் ஃபாசிலின் அசுரத்தனமான நடிப்பு என்று தான் சொல்ல வேண்டும். முதல் நாள் 7 கோடி வசூல் செய்த மாமன்னன் 2ம் நாள் வெறும் 4 கோடியாக வசூல் குறைந்த நிலையில், சனிக்கிழமையான நேற்று மீண்டும் 6 கோடி வசூல் செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்றும் 6 முதல் 7 கோடி வசூல் அசால்ட்டாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை மாமன்னன் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 17 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருப்பதாகவும் முதல் வார முடிவில் 25 கோட் வரை மாமன்னன் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக அவரது கடைசி படமான மாமன்னன் மாறி உள்ளது என்றும் வடிவேலு, பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர் ரஹ்மான் என ஸ்டார் காஸ்ட் மற்றும் டாப் நாட்ச் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் இருந்தது தான் இப்படியொரு பிசினஸை இந்த படத்துக்கு ஓபன் செய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.