திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மதுபோதையில் மர்மநபர்களால் ஒரு குடும்பமே கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து காலில் அடிபட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (47). இவரின் குடும்பம்தான் மொத்தமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளது. 4 பேர் வீட்டில் இருந்த போது துரத்தி துரத்தி கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
செந்தில் குமார் தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முதல்நாள் இரவு இவரது வீட்டின் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் செந்தில் குமாரை முதலில் அரிவாளால் வெட்டி கொன்றது என்று செய்திகள் வந்தன.
இதை தடுக்க சென்ற அவருடைய தம்பி மோகன்ராஜையும் அவருடைய தாய் புஷ்பவதி, சிச்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டியுள்ளனர். ஆனால் உண்மையில் இவர்களுக்கு இடையில் முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இரண்டு தரப்பும் எதிர் எதிரே கடைகள் வைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலே இந்த கொலைக்கு காரணம் என்கிறார்கள்.
படுகொலை: பல்லடத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. 2வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்து வருகின்றனர். எல்லா குற்றவாளிகளையும் கைது செய்யும் வரை உடல்களை வாங்க போவதில்லை என்று கூறி உறவினர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
பல்லடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை பிடிக்க தனிப்படை தீவிரமாக களமிறக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வருகிறோம் என்று திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சாமிநாதன் தகவல் வெளியிட்டுள்ளார்.
நிதியுதவி: இவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். அதில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மாதப்பூர் கிராமம், மஜரா கள்ளக்கிணர் அருகில் குரைதோட்டம் என்ற இடத்தில் நேற்று (3-9-2023) இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மது அருந்திவிட்டு புஷ்பவதி, க/பெ.பழனிசாமி (வயது 69), ரத்தினாம்பாள், க/பெ. சுப்பிரமணியம் (வயது 58), செந்தில்குமார், த/பெ.சண்முகம் (வயது 48) மற்றும் மோகன்ராஜ், த/பெ.பழனிசாமி (வயது 45) ஆகியோரை அரிவாளால் வெட்டியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சியான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் ஏனைய குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய உத்திரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன், என்று கூறியுள்ளார்.
தப்பி ஓட முயற்சி: இந்த நிலையில்தான் இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் தப்பி ஓட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலைக்கு பயன்படுத்திய கத்திகளை எடுத்து தருவதாக கைதான செல்லமுத்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட போது செல்லமுத்து தப்ப முயற்சி செய்துள்ளார்.
தமிழகத்தை குலைநடுங்க வைத்த பல்லடம் 4 பேர் படுகொலை- முக்கிய குற்றவாளிகளில் 4-வது கொலையாளி கைது
மாடியிலிருந்து குதித்து தப்பியோடிய போது, கால் எலும்பு முறிந்து செல்லமுத்துவுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மீண்டும் காயம்: இந்த நிலையில்தான் பல்லடம் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி வெங்கடேஷுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். 2 கால்களிலும் காயம் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
வெங்கடேஷ், சோன முத்தையா ஆகிய இருவர் திருப்பூர் மாவட்ட வடக்கு காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தனர். இதில் வெங்கடேஷுக்கு கால் உடைந்தது. அவரின் ஒரு கால், தவறி விழுந்ததில் முறிந்தது. பல்லடம் அருகே 4 பேரை வெட்டி கொலை செய்த வழக்கில் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (47). இவரின் குடும்பம்தான் மொத்தமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளது. 4 பேர் வீட்டில் இருந்த போது துரத்தி துரத்தி கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
செந்தில் குமார் தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முதல்நாள் இரவு இவரது வீட்டின் அருக 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் செந்தில் குமாரை முதலில் அரிவாளால் வெட்டி கொன்றது என்று செய்திகள் வந்தன.
இதை தடுக்க சென்ற அவருடைய தம்பி மோகன்ராஜையும் அவருடைய தாய் புஷ்பவதி, சிச்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டியுள்ளனர். ஆனால் உண்மையில் இவர்களுக்கு இடையில் முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இரண்டு தரப்பும் எதிர் எதிரே கடைகள் வைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலே இந்த கொலைக்கு காரணம் என்கிறார்கள்.
படுகொலை: பல்லடத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. 2வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்து வருகின்றனர். எல்லா குற்றவாளிகளையும் கைது செய்யும் வரை உடல்களை வாங்க போவதில்லை என்று கூறி உறவினர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
பல்லடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை பிடிக்க தனிப்படை தீவிரமாக களமிறக்கப்பட்டு உள்ளது.\ குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வருகிறோம் என்று திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சாமிநாதன் தகவல் வெளியிட்டுள்ளார்.
நிதியுதவி: இவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். அதில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மாதப்பூர் கிராமம், மஜரா கள்ளக்கிணர் அருகில் குரைதோட்டம் என்ற இடத்தில் நேற்று (3-9-2023) இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மது அருந்திவிட்டு புஷ்பவதி, க/பெ.பழனிசாமி (வயது 69), ரத்தினாம்பாள், க/பெ. சுப்பிரமணியம் (வயது 58), செந்தில்குமார், த/பெ.சண்முகம் (வயது 48) மற்றும் மோகன்ராஜ், த/பெ.பழனிசாமி (வயது 45) ஆகியோரை அரிவாளால் வெட்டியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சியான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் ஏனைய குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய உத்திரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன், என்று கூறியுள்ளார்.
தப்பி ஓட முயற்சி: இந்த நிலையில்தான் இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் தப்பி ஓட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலைக்கு பயன்படுத்திய கத்திகளை எடுத்து தருவதாக கைதான செல்லமுத்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட போது செல்லமுத்து தப்ப முயற்சி செய்துள்ளார்.
மாடியிலிருந்து குதித்து தப்பியோடிய போது, கால் எலும்பு முறிந்து செல்லமுத்து காயம் ஏற்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மீண்டும் காயம்: இந்த நிலையில்தான் பல்லடம் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி வெங்கடேஷுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். 2 கால்களிலும் காயம் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
வெங்கடேஷ், சோன முத்தையா ஆகிய இருவர் திருப்பூர் மாவட்ட வடக்கு காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தனர். இதில் வெங்கடேஷுக்கு கால் உடைந்தது. அவரின் ஒரு கால், தவறி விழுந்ததில் முறிந்தது. பல்லடம் அருகே 4 பேரை வெட்டி கொலை செய்த வழக்கில் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்,