சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை மதுமிதா ஜனனி கேரக்டரில் நடித்து வருகிறார்.
இவர் தன்னுடைய தோழியான நடிகை வைஷ்ணவி நாயக்குடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் எதிர்நீச்சல் மதுமிதா மற்றும் அந்த சீரியலில் அவருடைய தோழியாக நடிக்கும் வாசு கேரக்டரில் நடிக்கும் வைஷ்ணவி இருவரும் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் சின்னத்திரையில் அதிகமான ரசிகர்கள் எதிர்பார்க்கும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். அதிலும் இந்த சீரியலில் கதாநாயகியாக ஜனனி கேரக்டரில் நடிக்கும் நடிகை மதுமிதாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
சீரியலில் இவர் அமைதியின் சொரூபமாக சவால் மட்டுமே விட்டுக் கொண்டிருக்கும் கேரக்டராக இருப்பது பலருக்கும் வருத்தமாக இருக்கிறது. கதாநாயகி அடிக்கடி ஜெயிப்பது போன்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பு. ஆனாலும் கதைப்படி சீரியலில் எப்போதுமே குணசேகரனை எதிர்த்து சவால் விட்டுக்கொண்டு இருப்பது போன்றே காட்சிகள் போய்க்கொண்டிருக்கிறது.
எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு ஆப்பு வைத்த ஜனனி.. வீட்டிற்கே வந்த போலீஸ்.. இனி நடப்பது இது தானா?
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வேறு சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஜனனி அதாவது மதுமிதா மற்றும் வைஷ்ணவி இருவரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கின்றனர். அங்கு தாங்கள் சாப்பிட்ட ஹோட்டல் மற்றும் விளையாடிய கடற்கரை புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கின்றனர்.
ஏற்கனவே எதிர்நீச்சல் மதுமிதாவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்று ஒரு செய்தி வலம் வந்தது. ஆனால் எந்த இடத்திலும் மதுமிதா தன்னுடைய கணவரின் புகைப்படத்தை பயன்படுத்தவில்லை. அதனால் அது ஒரு வதந்தி தானா? எப்போதுமே மதுமிதா தன்னுடைய தோழிகளோடு வெளியிடங்களுக்கு சுற்றிக் கொண்டு இருக்கிறார். அதனால் மதுமிதா சிங்கிளாகத்தான் இருக்கிறார் என்று பலர் ரசிகர்கள் மதுமிதாவிற்கு ஹார்டின் பறக்க விட்டு வருகிறார்கள்.