மைக்ரோசாப்ட் நிறுவனம் AI துறையில் முன்னோடியாக இருக்கும் ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனத்தில் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்து தனக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப சேவைகளையும், தொழில்நுட்பத்தையும் OpenAI நிறுவனத்திடம் இருந்து பெற்று வருகிறது. ஆனால் கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அப்படியில்லை, அனைத்தையும் சொந்தமாக உருவாக்க வேண்டும். இதற்கு திறன்வாய்ந்த ஊழியர்கள் அவசியம்.
AI துறையில் முன்னோடியாக இருக்கும் 3 இன்ஜினியர்கள் தற்போது ஹாட் டிமாண்ட் ஆக உள்ளனர். ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்த 3 பேரையும் ஈர்ப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளது, இந்த மூவரும் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளனர், தற்போது கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
ChatGPT-யால் வீழ்ந்த முதல் நிறுவனம்.. AI ஆட்டம் ஆரம்பம்..!! சீனிவாசன் வெங்கடாச்சாரி, ஸ்டீவன் பேக்கர் மற்றும் ஆனந்த் சுக்லா ஆகிய மூவரையும் சுந்தர் பிச்சை நேரடியாக தொடர்பு கொண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்த்துள்ளார். இதேவேளையில் டிம் குக் இந்த 3 பேரையும் தக்கவைக்க அனைத்து விதமான முயற்சிகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சுந்தர் பிச்சை கொடுத்த நம்பிக்கையையும் வாய்ப்பையும் நம்பி தற்போது கூகுள் நிறுவனத்தின் large-language models-ல் பணியாற்றி வருகின்றனர். இந்த 3 பேரில் சீனிவாசன் வெங்கடாச்சாரி, ஆனந்த் சுக்லா ஆகியோர் இந்தியர்கள், ஐஐடி கல்லூரி பட்டதாரிகள்.
இதில் சீனிவாசன் ஆப்பிள் நிறுவனத்தை விட்டு ஆக்டோபர் 2022ல் வெளியேறினார், ஆனந்த் நவம்பர் 2022ல் வெளியேறினார். சீனிவாசன் வெங்கடாச்சாரி, ஸ்டீவன் பேக்கர் மற்றும் ஆனந்த் சுக்லா ஆகிய மூவரையும் சுந்தர் பிச்சை நேரடியாக தொடர்பு கொண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்த்துள்ளார்.
இதேவேளையில் டிம் குக் இந்த 3 பேரையும் தக்கவைக்க அனைத்து விதமான முயற்சிகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சுந்தர் பிச்சை கொடுத்த நம்பிக்கையும் வாய்ப்பையும் நம்பி தற்போது கூகுள் நிறுவனத்தின் large-language models-ல் பணியாற்றி வருகின்றனர்.
இதேவேளையில் எலான் மஸ்க் துவங்க உள்ள புதிய AI ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் கிளை நிறுவனமான DeepMind நிறுவனத்தில் இரு மூத்த ஆராய்ச்சியாளர்களை தனது நிறுவனத்தில் பணியாற்ற ஈர்த்துள்ளார். இந்நிறுவனத்திற்கான செயல்பாடுகளை வேகப்படுத்த 10000 graphics processing units (GPUs) வாங்கியுள்ளார். இது AI மற்றும் high-end graphics செயல்களை செய்யக்கூடிய திறன் கொண்டவை.