சாம்பியன் பட்டம் வென்று சாதிப்பாரா பிரக்ஞானந்தா? எதிர்பார்ப்பில் மக்கள்!

post-img

உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதிப்பாரா என ஒட்டு மொத்த இந்தியாவும் காத்திருக்கிறது.

அஜர்பைஜானில் நடைபெற்று வரும் செஸ் உலகக் கோப்பை தொடரில் , தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்சல்சனை எதிர்த்து விளையாடி வருகிறார். சென்னையில் பிறந்த பிரக்ஞானந்தாவின் தந்தை ராமேஷ்பாபு - தாய் நாகலட்சுமி. தமிழ்நாடு ஸ்டேட் கார்ப்ரேஷன் வங்கி ஊழியரான ராமேஷ்பாபு, சிறு வயதிலேயே போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டவர். பிரக்ஞானந்தாவை செஸ் போட்டிகளுக்கு அழைத்துச் சென்று அவருக்கு பக்க பலமாக திகழ்பவர் அவரது தாய் நாகலட்சுமி.

தனது மூன்று வயதில் செஸ் விளையாட தொடங்கிய பிரக்ஞானந்தா ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர். பிரக்ஞானந்தாவின் பக்கபலமாக இருப்பவர் அவரின் பயிற்சியாளர் கிராண்ட் மாஸ்டர் ஆர். பி. ரமேஷ். . பிரக்ஞானந்தாவின் திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயலாற்றி வருகிறார். தற்போது, அவர் மேக்னஸ் கார்சல்சனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்வார் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

பிரக்ஞானந்தாவின் செஸ் வாழ்க்கையில் முதல் திருப்புமுனையாக இருந்தது 8 வயதிற்குட்பட்ட உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தான். அதில் அவர் தங்கப்பதக்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து பல போட்டிகளில் வெற்றியை தன் வசமாக்கியுள்ளார். 2016-ல், தனது 10 வயதில் சர்வதேச மாஸ்டராக மாறி புதிய சாதனை படைத்தார். 2018-ம் ஆண்டில் , பன்னிரெண்டே வயதான பிரக்ஞானந்தா இளகிராண்ட் மாஸ்டர் ஆன வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

பின்னர் 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இணையதளப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இதுவே பிரக்ஞானந்தாவின் பெருமைக்குரிய சாதனையாக மாறியது. இதன் மூலம் கார்ல்சனை வீழ்த்திய 3-வது இந்திய வீரராக மாறினார் பிரக்ஞானந்தா. முன்னதாக, செஸ் விளையாட்டின் முடி சூடா மன்னன் விஸ்வநாத் ஆனந்தும், பெண்டாலா ஹரிகிருஷ்ணாவும் கார்ல்சனை வீழ்த்தி வரலாற்றில் இடம் பிடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து 2022- ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியிலும் FTX கிரிப்டோ கோப்பையிலும் பிரக்ஞானந்தாவிடம் தோல்வியை தழுவினார்.

கார்சல் மற்றும் பிரக் இருவரும் முதல் முறையாக உலகக் கோப்பை இறுதி யுத்தத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதுவரை ஆயிரத்து 789 போட்டிகளில் விளையாடியுள்ள பிரக். 894 போட்டிகளில் வெற்றியை ருசித்துள்ளார். 504 போட்டிகளில் டிரா செய்துள்ள அவர், 391-ல் தோல்வியையும் தழுவியுள்ளார். வெள்ளை காயின் மூலம் விளையாடியே பிரக் அதிக முறை வெற்றி பெற்றுள்ளார்.

 

Related Post