நம்பி போன ரசிகர்கள்.. முதுகில் குத்திய ஹீரோக்கள்.. அல்லு அர்ஜுன் + தர்ஷன்.. அதிர்ச்சியா இருக்கே!

post-img
சென்னை: தென் சினிமாவின் முக்கிய டாப் ஹீரோக்கள் அடுத்தடுத்து கொலை வழக்கில் அல்லது மரணம் தொடர்பான வழக்கில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, தனது தோழி பவித்ரா கவுடாவை சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியதற்காக தனது ரசிகர் ரேணுகா சுவாமியைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூன் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார். நடிகர் தர்ஷன் தனது காதலியை கிண்டல் செய்தவரை கொன்றதாக புகார் வைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் தர்ஷன் இருந்தது சிசிடிவி காட்சிகளில் உறுதியாகி உள்ளது. கொலை வழக்கு தொடர்பாக கன்னட நடிகர் "டி பாஸ்" தர்ஷன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். தனது காதலி நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பிய ரேணுகா சுவாமி என்ற நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த ரேணுகா சுவாமி, சித்ரதுர்காவை சேர்ந்த மெடிக்கல் ஷாப்பில் பணிபுரிந்து வந்தார். இவர் நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை மெசேஜாக அனுப்பி உள்ளார். இந்த பவித்ரா கவுடா கடந்த 10 வருடமாக தர்ஷன் உடன் காதலில் இருக்கிறார். காதலியை கிண்டல் செய்த ரேணுகா சுவாமியை பவுன்சர்ஸ் வைத்து தர்ஷன் மோசமாக தாக்கி உள்ளார். டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 வயது பெண் உயிரிழந்தது மற்றும் அவரது மைனர் மகன் பலத்த காயம் அடைந்தது தொடர்பாக சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். பொதுமக்களை கட்டுப்படுத்த தியேட்டரில் தெலுங்கானா போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், பிரீமியர் காட்சிக்கு முன்னதாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த இடத்திற்கு வந்தபோது, அவரது ரசிகர்கள் வெறித்தனமாகச் அவரை பார்க்க அருகில் சென்றனர்.. இதனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒரு பெரிய சினிமாவிற்கு.. அதிலும் ரசிக வெறி கொண்ட ஒரு சினிமா உலகில்.. படம் ரிலீஸ் ஆகும் நாளில் பிரிமியர் ஷோவை பார்க்க வெளிப்படையாக செல்வது என்பது எவ்வளவு தவறான விஷயம். ஆனால் அந்த இங்கீதம் கூட இல்லாமல் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றது பெரிய அளவில் சர்ச்சையானது. அதிலும் அர்ஜுன் வெறுமனே படத்தைப் பார்த்து விட்டுச் செல்லவில்லை. அவர் காரின் சன்ரூஃப்பில் இருந்து வெளியே வந்தார், தனது திரைப்படத்தின் வெளியீட்டைக் கொண்டாடிய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார், வாழ்த்தினார். இதனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. இந்த கூட்ட நெரிசலில்தான் ரேவதி என்ற பெண் பலியானார். 9 வயதே கொண்ட அவரின் மகன் ஸ்ரீ தேஜா மூச்சு பாதிப்பு ஏற்பட்டு கோமாவில் உள்ளார். இதற்காக கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் உடனே ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவரை கைது செய்ய ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. அல்லு அர்ஜுன் வீட்டில் இருந்து கைது செய்து அழைத்து வரப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அதன்பின் 50,000 ரூபாய் பத்திரத்தில் அவருக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், ஆவணங்கள் தாமதமானதால் அவர் ஒரு இரவை மட்டும் அவர் சிறையில் கழித்தார். சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜுனை பார்க்க பல நடிகர்கள்.. முன்னணி ஹீரோக்கள் அவரின் வீட்டிற்கு சென்றனர். முக்கியமாக அல்லு அர்ஜுன் கைதானது என்னவோ வெறும் 3-4 மணி நேரம். அதற்குள் வெளியே வந்துவிட்டார் அப்படிப்பட்டவர் பார்க்க பல நடிகர்கள் கூடினார்கள். ஆனால் அதில் ஒருவர் கூட இறந்த ரேவதி குடும்பத்தை பார்க்க செல்லவில்லை. அல்லு அர்ஜுன் கூட செல்லவில்லை.

Related Post