பார்ட்டியில் முதலாளியுடன் உறவு கொள்ள சொன்ன கணவன்.. மறுத்த மனைவிக்கு ஸ்பாட்டிலேயே முத்தலாக்!

post-img
மும்பை: இஸ்லாமியர்கள் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது தடை செய்யப்பட்டிருந்தாலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் ஆங்காங்கே கிளம்பி வருகின்றன. அதற்கேற்றார் போல் இப்போதும் ஒரு சம்பவம் மும்பையில் நடந்து, மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் சோஹைல் ஷேக்.. இவருக்கு 45 வயதாகிறது.. சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். சோஹைலுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. கருத்து வேறுபாடு: ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.. ஒருகட்டத்தில் இருவரும் விவாகரத்து செய்யவும் முடிவு செய்து, கோர்ட்டை நாடியிருக்கிறார்கள். இந்த விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, கடந்த ஜனவரியில் 2வது கல்யாணம் செய்து கொண்டார் சோஹைல். சத்ரபதி சாம்பாஜி நகரை சேர்ந்த 28 வயது பெண்ணுடன் இந்த 2வது திருமணம் நடந்துள்ளது.. ஆரம்பத்தில் 2வது மனைவிக்கு எந்த தொந்தரவும் தராத சொஹைல், அடுத்த சில மாதங்களிலேயே ரூ.15 லட்சம் ரூபாய் இருந்தால்தான், முதல்மனைவியை டைவர்ஸ் செய்ய முடியும் என்று கேட்டு சித்ரவதை செய்ய துவங்கியிருக்கிறார்.. ரூ.15 லட்சத்தை பெற்றோரிடம் இருந்து உடனே வாங்கி வருமாறும் சோஹைல் ஷேக் டார்ச்சர் செய்து வந்துள்ளார். ஆபீஸ் பார்ட்டி: இந்நிலையில் ஒருநாள், தன்னுடைய ஆபீசில் பார்ட்டி நடப்பதாக கூறி, மனைவியை அழைத்துள்ளார்.. தனக்கு விருப்பமில்லை என்று அந்த பெண் சொல்லியும், கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளார்.. பார்ட்டி முடிந்ததுமே, மனைவியை தன்னுடைய கம்பெனி ஓனருக்கு அறிமுகப்படுத்தி, அவருடன் உறவு வைத்துக்கொள்ளும்படியும் நெருக்கடி தந்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், முதலாளியுடன் தன்னால் நெருக்கமாக இருக்க முடியாது என்று சொல்லி மறுப்பு தெரிவித்துள்ளார்.. ஏற்கனவே 15 லட்சம் பணம் கேட்டும் தராத ஆத்திரத்தில் இருந்த சோஹைல் ஷேக், கம்பெனி முதலாளியுடனும் நெருக்கமாக இருக்க எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கேயே மனைவியை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியிருக்கிறார். ஆனால், கொடூரமாக தாக்கப்பட்டபோதும், கணவனின் விருப்பத்துக்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை. தலாக்: இதனால், உச்சக்கட்ட எரிச்சலடைந்த சொஹைல், இஸ்லாமிய முறைப்படி விவாகரத்து செய்ய 3 முறை "தலாக்" என்று சொல்லி, விவாகரத்து செய்தார்.. அத்துடன், அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே விரட்டியடித்தார்.. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் கண்ணீர் விட்ட அந்த பெண், கல்யாண் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தன்னுடைய கணவர் மீது புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்...!!

Related Post