"நானும் யாஷிகாவும் நடிக்கும் 'சில நொடிகளில்' படத்தின் புகைப்படங்களைத்தான் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தேன். இப்படத்தினை, கன்னட இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்குகிறார்.
'ஜீன்ஸ்', 'தாம் தூம்', 'கோச்சடையான்' படங்களை தயாரித்த முரளி மனோகர் தயாரிக்கிறார். படத்தின் கதைப்படி நானும் யாஷிகாவும் ஹாலிடே செல்வோம். அப்படி, செல்லும் இடத்தில் போனிலிருந்து செல்ஃபி எடுத்துக்கொள்வது போன்ற காட்சிகளைப் படமாக்கினார்கள். அந்தப் படங்களைத்தான் பட புரொமோஷனுக்காக எனது ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாவிலும் பகிர்ந்துகொண்டேன்.
மற்றபடி, எனக்கும் யாஷிகாவுக்கும் எல்லோரும் நினைப்பது போன்று காதலும் கிடையாது; கல்யாணமும் கிடையாது. எங்கள் புகைப்படங்களைப் பார்த்துவிட்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி எடுத்துக்கொள்கிறார்கள். வெளியூரில் இருந்ததால் உடனடியாக இதுகுறித்து எதுவும் பேசமுடியவில்லை" என்கிறவரிடம் "அடுத்தப் படமும் மோகன் ஜியுடனேயே இணைகிறீர்களே? எந்த நிலையில் உள்ளது?" என்றேன். "இப்போ, போஸ்ட் புரொடொக்ஷன் பணிகள் போய்க்கிட்டிருக்கு. ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து ஸ்டார்ட் பண்றோம்" என்கிறார் உற்சாகமாக!