மக்களை பிழிந்தெடுக்கும் தக்காளி விலை. இன்றைய விலை என்ன தெரியுமா?

post-img

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன் வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளியின் விலை சற்று குறைந்தது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது

கோயம்பேட்டு காய்கறி சந்தைக்கு நாளொன்றுக்கு 1100 டன் தக்காளி தேவை உள்ளது. ஆனால், இன்று 15 லாரிகளில் 380 டன் அளவில் மட்டுமே தக்காளி எடுத்து வரப்பட்டுள்ளன. வரத்து குறைவு காரணமாக இன்று 1 கிலோ தக்காளி மொத்த விற்பனை விலை 120க்கும், சில்லரையில் 130 வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடந்த 2 நாளில் 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

 

இன்று கர்நாடகா, ஆந்திரா தவிர்த்து மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கூடுதல் தக்காளி வாகனங்கள் வரவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் தக்காளி வருகையை பொறுத்து விலை மாற்றம் நடைபெறும் எனவும் கோயம்பேடு தக்காளி வியாபாரிகள் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Post