டெல்லி: நமது நாட்டில் பல ரயில்கள் எப்போதும் முழுமையாக நிரம்பாது. இதனால் ரயில்வே துறைக்குக் கணிசமான இழப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும். ஆனால், எல்லா ரயில்களும் இதுபோல நஷ்டத்தில் இயங்குகிறது என்று சொல்ல முடியாது. சில ரயில்கள் நல்லா லாபகரமாகவே இயங்கி வருகிறது. அப்படிக் கடந்த நவ. மாதம் அதிக வருவாய் ஈட்டிய ரயில் எது தெரியுமா.. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் ரயில் பயணத்திற்கு எப்போதுமே ஒரு மவுசு இருக்கும். விலை குறைவு, சவுகரியமான பயணம் உள்ளிட்ட காரணங்களால் ரயிலில் பயணிக்கவே இங்குப் பலரும் விரும்புவார்கள்.
அதேநேரம் டிக்கெட் விலை குறைவாக இருப்பதாலும் பல நேரங்களில் ரயில்கள் முழுமையாக நிரம்பாது என்பதாலும் ரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்படும். ஆனால், சில குறிப்பிட்ட ரூட்களில் இயக்கப்படும் ரயில்களில் மட்டும் வருவாய் கொட்டும்.
ரயில்: அப்படி நமது நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் ரயில் எங்கே இயங்கி வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா.. இந்த கேள்வியைக் கேட்டதும் உங்களுக்கு பெரும்பாலும் எதாவது வந்தே பாரத் ரயில் தான் நினைவுக்கு வரும். ஏனென்றால் வந்தே பாரத்தில் தான் முழுக்க முழுக்க ஏசி, ரயில் டிக்கெட் கட்டணமும் அதிகமாக இருக்கும். எனவே, நிச்சயம் அதுதான் அதிக வருவாய் ஈட்டுவதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், உண்மையில் இவை எதுவும் இல்லை.. லிஸ்டில் டாப் இடத்தில் இருப்பது பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ். 12417/12418 என்ற நம்பர் கொண்ட இந்த ரயில் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் இருந்து புது டெல்லிக்குத் தினசரி இயக்கப்படும் ரயிலாகும். பண்டிகை காலங்களில் இந்த ரயிலில் கூட்டம் எப்போதும் அள்ளும்.
அதிக வருவாய் ஈட்டும் ரயில்: ஒவ்வொரு ஆண்டும் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாகவே இது இருக்கும். கடந்த நவ. மாதம் வருவாயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்களை விஞ்சும் வகையில், அதிக வருவாய் ஈட்டிய ரயிலாக இது இருக்கிறது.
தினசரி இரவு 10.10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 7 மணிக்கு பிரயாக்ராஜ் சென்றடையும். மறுமார்க்கமாக இரவு 10.10 மணிக்கு பிரயாக்ராஜ் நகரில் இருந்து புறப்படும் இந்த ரயில் அடுத்த நாள் காலை 7 மணிக்கு டெல்லி சென்றடையும். இந்த ரயில் இடையில் ஃபதேபூர், கான்பூர், அலிகார், காஜியாபாத் ஆகிய 4 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
தாமதமே இல்லை: மேலும் மற்ற ரயில்களைப் போல இல்லாமல் இந்த ரயில் சரியான நேரத்திலேயே இயக்கப்படுகிறது. இதன் அதிகபட்ச தாமதமே 15 நிமிடங்களுக்குள் தான் இருக்கிறது. இதன் காரணமாகவே பெரும்பாலான மக்கள் இந்த சூப்பர் ஃபாஸ்ட் ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதில் மொத்தம் 9 ஸ்லீப்பர் பெட்டிகள், மூன்றாம் வகுப்பு ஏசி ஸ்லீப்பர் 3 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு ஏசி ஸ்லீப்பர் 4 பெட்டிகள், முதலாம் வகுப்பு ஏசி ஸ்லீப்பர இரண்டு பெட்டிகள் உள்ளன. இது தவிர வழக்கம் போல பொது பெட்டிகள் 4 இருக்கும்.
கடந்த நவம்பர் மாதத்தில் இந்த பிரயாக்ராஜ் முதல் டெல்லி வரை இந்த ரயிலில் மொத்தம் 43,388 பயணிகளைப் பயணித்துள்ளனர். அதேபோல மறுமார்க்கத்தில் சுமார் 47,040 பயணிகளைப் பயணித்துள்ளனர். இதன் மூலம் இந்த ஒரு ரயிலில் மட்டும் கடந்த மாதம் ரூ.6.6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
மற்ற ரயில்கள்: இதே காலகட்டத்தில் அதிக வருவாய் ஈட்டிய மற்ற ரயில்கள்:
பிரயாக்ராஜ் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் (12275/12276)
வருவாய்: ரூ. 5.2 கோடி | மொத்த பயணிகள்: 55,481
ஆனந்த் விஹார் டெர்மினல் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் (22437/22438)
வருவாய்: ரூ. 3.7 கோடி | மொத்த பயணிகள்: 41,797
புது டெல்லி-வாரணாசி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (22435/22436)
வருவாய்: ரூ. 2.2 கோடி | மொத்த பயணிகள்: 16,899
வாரணாசி-புது டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
வருவாய்: ரூ. 2.4 கோடி | மொத்த பயணிகள்: 16,823