துபாய்: "லைஃப் டைம் செட்டில்" என்ற வார்த்தையை நிஜமாக்கும் வகையில் உண்மையாகவே, வெளிநாட்டுக்கு வேலைக்கு போன இடத்தில், இந்தியர் ஒருவருக்கு எதிர்பார்க்காத பணமழை கொட்டியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வரும் கேரளாவை சேர்ந்தவருக்கு தான் லாட்டரியில் ரூ.57 கோடி பரிசு கிடைத்துள்ளது. கடை ஒன்றில் சேல்ஸ் எக்ஸியூட்டிவ் வேலைக்கு போன அரவிந்த் அப்புக்குட்டன் தற்போது ஒரு கடையே வைக்கும் அளவுக்கு கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பலரும் ஐக்கிய அரபு அமீரகங்களில் பணியாற்றி வருகிறார்கள். டிரைவர் உள்பட பல்வேறு தொழில்களில் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் அரபு நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். இப்படி ஐக்கிய அரபு அமீரகங்களில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்தவர்களுக்கு லாட்டரி பரிசும் கிடைத்து வருகிறது.
கேரளாவில் லாட்டரி சீட்டுக்கள் விற்கப்படுவது போலவே, ஐக்கிய அரபு அமீரத்திலும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த லாட்டரி டிக்கெட்டுகளை அங்கு பணி செய்யும் வெளிநாட்டினரும் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கேரளாவில் வாங்கி பழகியவர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிறகு அங்கும் லாட்டரிகள் வாங்குகிறார்கள்.
இதில், சில நேரங்களில் லாட்டரியில் முதல் பரிசு அடித்து, அவர்களின் தலைவிதியயே மாற்றிவிடுவதையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில்தான் தற்பொது அபுதாபியில் இந்தியருக்கு ரூ.57 கோடி ரூபாய் பரிசுத்தொகை லாட்டரியில் விழுந்துள்ளது. "லைப் டைம் செட்டில்" என்ற வார்த்தையை நிஜமாக்கும் வகையில் உண்மையாகவே, வேலைக்கு போன இடத்தில் இந்தியருக்கு எதிர்பார்க்காத பணமழை கொட்டியுள்ளது. இந்த அதிர்ஷ்டசாலி யார்? அவருக்கு எப்படி இந்த பரிசுவிழுந்தது? என்பது குறித்த விவரம் வருமாறு:-
ஷார்ஜாவில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார் கேரளாவை சேர்ந்த அரவிந்த் அப்புக்குட்டன். இவர் அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியை தனது நண்பர்களுடன் இணைந்து வாங்கியுள்ளர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் அரவிந்திற்கு இருந்துள்ளது. இந்த நிலையில் தான் கடந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலில் டிக்கெட் எண் (447363) என்ற எண்ணுக்கு முதல் பரிசாக 25 மில்லியன் திர்ஹம் ( ரூ.57 கோடி) பரிசுத்தொகை விழுந்துள்ளது.
இவ்வளவு பெரிய பரிசுத்தொகை விழுந்துள்ளதால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ள அரவிந்தன், நடப்பது நிஜமா இல்லை கனவா? என நினைக்க முடியாத அளவுக்கு இருப்பதாக சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பரிசுத்தொகை விழும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என முடிவு செய்யவில்லை.
எனக்கு லாட்டரியில் பரிசு அடித்து இருப்பதாக எனது நண்பர்தான் போன் செய்து கூறினார். முதலில் அதை நம்பவில்லை.. தற்போது கிடைத்து இருக்கும் பணத்தை கோண்டு புத்திசாலித்தனமாக செலவு செய்ய திட்டமிட்டுள்ளேன். குறிப்பிட்ட தொகையை செலவு செய்துவிட்டு மீதமுள்ள தொகையை சேமிக்க உள்ளேஎன்" என்றார்.
கடை ஒன்றில் சேல்ஸ் எக்ஸியூட்டிவ் வேலைக்கு போன அரவிந்த் அப்புக்குட்டன் இனி சொந்தமாக ஒரு கடையே வைத்துவிடாலம் என அவரது நண்பர்கள் அவரை ஜாலியாக கலாய்த்து வருகிறார்கள். இரண்டு டிக்கெட்டுகள் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசமாக கொடுக்கப்படும் நிலையில், இப்படி இலவசமாக கிடைத்த லாட்டரி டிக்கெட்டிற்கு தான் பரிசுத்தொகை விழுந்துள்ளதாம். அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி அடிக்கும் எனத்தெரியாது. அடிக்கும் போது இப்படித்தான் மொத்தமாக வாழ்க்கையையே மாற்றிவிடும் என அவரது நண்பர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
Weather Data Source: Wettervorhersage 21 tage