சென்னை: 2026 சட்டசபை தேர்தலில்.. விஜய்தான் எதிர்க்கட்சிகளுக்கு மைனஸாக இருக்க போகிறார்.. என்று திமுக எடுத்த உட்கட்சி சர்வே ஒன்றில் கூறப்பட்டு உள்ளதாம்.
2026 சட்டசபை தேர்தலுக்காக இப்போதே கட்சிகள் தயாராக தொடங்கிவிட்டன. ஆளும் திமுக ஏற்கனவே தேர்தல் திட்டங்களை வகுக்க தொடங்கிவிட்டது. தேர்தல் பணிகளை செய்வதற்காக குழுக்களை நியமித்துவிட்டது.
தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க இப்போதே குழுக்களை நியமித்து.. பூத் கமிட்டி பணிகளை மேற்கொள்ள திமுக திட்டமிட்டு வருகிறதாம். இன்னொரு பக்கம் அதிமுகவும் தேர்தலுக்கான திட்டங்களை வகுத்து வருகிறதாம்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. கடந்த லோக்சபா தேர்தலில் 10 தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. இதனால் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறாராம்.
அரசியல் ஆலோசகர்: இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி பிரபல அரசியல் ஆலோசகர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கிறாராம். தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை செய்ய பேசிக்கொண்டு இருக்கிறாராம். அதன்படி பிரஷாந்த் கிஷோரிடம் பேசுவதற்கு முயன்று கொண்டு இருக்கிறாராம். அவரை வைத்து 2026 தேர்தல் பணிகளை செய்யும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளாராம்.
அதேபோல் விஜயும் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை செய்து வருகிறாராம். தற்போது அவருக்காக தேர்தல் பணிகளை ஒருவர் செய்து கொண்டு இருக்கிறார். இன்னொருவர் உடனும் தேர்தல் பணிகளை செய்ய விஜய் பேசிக்கொண்டு இருக்கிறாராம். இப்போது இருக்கும் ஆலோசகருக்கு பதிலாக வேறு ஒரு ஆலோசகரை நியமிக்க விஜய் திட்டமிட்டு வருகிறாராம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக ஆளும் திமுக தரப்பு சர்வே எடுக்க முடிவு செய்துள்ளதாம். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் விஜய்க்கு இருக்க கூடிய மாஸ் தொடர்பாக சர்வே நடத்த திமுக முடிவு செய்துள்ளதாம். 2026 சட்டசபை தேர்தலில்.. விஜய்தான் எதிர்க்கட்சிகளுக்கு மைனஸாக இருக்க போகிறார்.. என்று திமுக எடுத்த உட்கட்சி சர்வே ஒன்றில் கூறப்பட்டு உள்ளதாம்.
அதாவது விஜய்.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டார். நாம் தமிழர் உடனும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. விஜயின் வருகையால் எனது வாக்குகள் குறையாது. விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள், என்று சீமான் தெரிவித்துள்ளார். முன்னதாக மாற்று அரசியல் மாற்று சக்தி இந்த மாதிரி ஏமாத்துற வேலையெல்லாம் செய்ய மாட்டோம்.. அரசியல் மேடை என்றாலே கொந்தளிப்பாக பேசுவது, உலக வரலாறு, கோட்ஸ்களை எம்பி 3 ஆடியோ போல பேசுவது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக விமர்சித்துள்ளார் நடிகர் விஜய்.
விஜய் உடன் கூட்டணி கிடையாது.. திமுக கூட்டணி உறுதியாக உள்ளது என்று விசிக திருமாவளவனும் தெரிவித்து விட்டார்.
விஜய் பிரிப்பார்; இதனால் எதிர்க்கட்சிகள் வாக்குகளை விஜய் பிரிப்பார். எதிர்க்கட்சி கூட்டணி வைத்தால் அவர்களுக்கு கொஞ்சம் சாதகம். ஆனால் அதற்கு விஜய் இடம் தர மாட்டார். இதனால் வாக்குகள் பெரிதாக பிரியும். கிட்டத்தட்ட 10 சதவிகித வாக்குகளை கூட விஜய் பிரிக்க வாய்ப்புகள் உள்ளன என்று திமுக நடத்திய உட்கட்சி சர்வே தெரிவித்துள்ளதாம்.