சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயின் சமீபத்திய மூவ்.. கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி விஜயின் ரசிகர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாம். விஜய்க்கு இது தொடர்பாக சென்ற சில தகவல்கள் அவரை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளதாம்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நேற்று பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து நிவாரணம் வழங்கினார். பொதுவாக புயல் போன்ற பாதிப்புகளில் மக்களை நேரில் தலைவர்கள் சந்தித்து நிவாரணம் வழங்குவதே வழக்கம்.
அரசியல்வாதிகள்.. ஏன் முதல்வர் ஸ்டாலின் கூட நேரடியாக சென்று மக்களிடம் விசாரித்து நிவாரணங்களை வழங்கினர். சினிமாவில் இருந்து பிரபலமாக இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்கள் எம்ஜிஆர், விஜயகாந்த் கூட புயல், வெள்ளம் சமயங்களில் நேரடியாக மக்களிடம் வந்து நிவாரணம் வழங்கி உள்ளனர்.
ஆனால் நடிகர் விஜய் மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பஸ் அனுப்பி அவர்களை நேரில் வரவழைத்து நிவாரணம் வழங்கி உள்ளார்.
விஜயின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. விஜய் செய்த விஷயங்கள் இணையத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. கூட்டம் அதிகமாக இருக்கும்.. நான் வந்தால் கூட்டம் இன்னும் கூடும். அதானால் நான் வரவில்லை என்று விஜய் கூறியுள்ளார். ஆனால் விஜய் நேரில் சென்று சந்தித்து இருக்க வேண்டும்.. சந்திக்கவில்லை என்றால்.. புயல் நிவாரணங்களை தொண்டர்கள் மூலம் வழங்கி இருக்க வேண்டும்.
அதுவும் இல்லையென்றால் புயல் பிரச்சனைகள் முடிந்து.. பாதிக்கப்பட்டவர்களின் ஊரிலேயே மேடை போட்டு 2- 3 நாட்களுக்கு பிறகு நிவாரணம் வழங்கி இருக்கலாம். ஆனால் இதை எல்லாம் செய்யாமல் பாதிக்கப்பட்டவர்களை இந்த மோசமான தருணத்தில் பேருந்தில் வரவழைத்து உள்ளனர்.
விமர்சனம்: இது எல்லாம் விமர்சனங்களாக விஜய்க்கு எதிராக சென்றுள்ளது. அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க போகிறோம்.. மெஜாரிட்டி இடங்களில் வென்று ஆட்சியை பிடிப்போம் , எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்று கூறிய விஜய் இதுவரை களத்திற்கு செல்லவே இல்லை. இது போன்ற நேரங்களில்தான் கட்சி தொடங்கி ஒருவர் களத்திற்கு சென்று மக்களுடன் நிற்க வேண்டும். திமுக, அதிமுக போன்ற கட்சிகள் வளர காரணம் மக்களுடன் நின்றதே. ஆனால் விஜய் அப்படி ஒரு சான்சை மிஸ் செய்துவிட்டார். இந்த ஒரு விஷயம் என்று இல்லாமல் விஜய் அரசியலில் வரிசையாக தவறு செய்து வருகிறார்.
விஜய் இதனால் கடுமையாக அப்செட் ஆகி உள்ளாராம். இந்த விவகாரம் வெளியே தவறாக போய்விட்டது. நாம் எதோ நினைத்து செய்த ஒரு விஷயம்.. நமக்கு எதிராகவே திரும்பிவிட்டது. கொஞ்சம் பின்விளைவுகளை யோசித்து செய்து இருக்கலாம். நாம் நல்லது செய்து இருக்கிறோம். ஆனால் அது கெட்டதாக போய் முடிந்துவிட்டது என்று விஜய் தரப்பு அப்செட்டில் இருக்கிறதாம். கட்சியின் சில நிர்வாகிகளை பனையூருக்கு அழைத்து வந்து விஜய் டோஸ் விட்டதாக கூறப்படுகிறது.
விஜய் கொஞ்சம் யோசித்து செயல்படலாம் .. கட்சியில் சில மூத்தவர்களை சேர்த்துவிட்டு அவர்களின் பேச்சுக்களை விஜய் கேட்கலாம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Weather Data Source: Wettervorhersage 21 tage