கோயில் திருவிழா டூ சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடை... நனவாகுமா சமீராவின் கனவு?

post-img

விஜய் டிவி-யின் ரியாலிட்டி ஷோக்களுள் முக்கியமானது சூப்பர் சிங்கர். இது பெரியவர்களுக்கு தனியாகவும், குழந்தைகளுக்கு தனியாகவும் வெவ்வேறு சீசன்களாக ஒளிபரப்பட்டு வருகிறது. விரைவில் துவங்கவிருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் இருபது திறமையான குழந்தை பாடகர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் பிரபல பின்னணி பாடகர்கள் கே.எஸ்.சித்ரா, மனோ, ஆனந்த் வைத்தியநாதன் மற்றும் மால்குடி சுபா ஆகியோர் நடுவர்களாக இடம்பெறுகிறார்கள். நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வழிகாட்டும் ஒரு பெரிய ஜூரி குழுவும் இடம்பெற்றுள்ளது.

 

சூப்பர் சிங்கரில் கலந்துக் கொண்ட பல போட்டியாளர்கள், தங்கள் ஆத்மார்த்தமான ஃபெர்பார்மென்ஸால் பிரபலமடைந்தனர். விரைவில் துவங்கவிருக்கும் அடுத்த சீசனில் பல இசைத் தருணங்களும் ஃபன் ஃபேக்டர்களும் பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன. முன்னதாக கென்லி சிஜா என்ற போட்டியாளர் அறிமுகப்படுத்தப்பட்டார்.

                                                                                               

இந்நிலையில் தற்போது அடுத்தப் போட்டியாளராக சமீரா என்பவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்த ப்ரோமோ வீடியோவில், தஞ்சாவூரைச் சேர்ந்த சமீரா பள்ளி முடிந்ததும் பாடுவதற்கு ஓடுவதையும், அப்படி கோயில் கோயிலாக பாடி அதில் கிடைக்கும் 300 ரூபாயில் தான் குடும்பம் ஓடுகிறது என்றும் அவரது அம்மா கூறுகிறார். எத்தனையோ கோயில்களில் பாடியிருந்தாலும், மேடையில் பாடுவது தான் தனது கனவு என்கிறார் சமீரா. இவர் பார்வையாளர்களை கவர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

Related Post