சென்னை மண்ணடியில் மத்திய அரசு அதிகாரிக்கு மறக்க முடியாத சம்பவம்.. யார் அந்த திருடன்?

post-img

சென்னை: சென்னை மண்ணடியில் வசிக்கும் மத்திய அரசு உயர் அதிகாரியின் மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபர், ஹெல்மெட் எதுவும் அணியாமல் ஜாலியாக ஈசிஆர் சாலையில் பயணித்துள்ளார். பாரிமுனை வழியாக கொடிமர சாலை, நேப்பியர் பாலம், மெரினா, கலங்கரை விளக்கம், சாந்தோம், அடையார், திருவான்மியூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலை வரை அவர் பயணித்துள்ளார். ஆனால் போலீசிடம் சிக்கவே இல்லை.
சென்னையில் இருசக்கர வாகனங்களை, நான்கு சக்கர வாகனங்களை திருடிவிட்டு யாராலும் அவ்வளவு எளிதாக தப்பிக்க முடியாது.. ஏனெனில் எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. துல்லியமாக நம்பர் பிளேட்டை வைத்து அந்த வண்டி எங்கு சென்றது என்பதை போலீசாரால் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.

எண்ணூர் முதல் செங்கல்பட்டு வரை, மெரினா முதல் திருவள்ளுர் வரை எந்த பக்கம் வாகனத்தில் போனாலும் ஈஸியாக போலீசாரால் பிடித்துவிட முடியும். ஆனால் மிக அபூர்வமாகவே சில திருடர்கள் சிக்காமல் தப்பிப்பார்கள். அப்படித்தான் ஒரு திருடன் மத்திய அரசுஅதிகாரியின் பைக்கை திருடி சென்று தப்பித்துள்ளார். இத்தனைக்கும் பைக்கை திருடிய நபர், எல்லா சாலைகளிலும் ஹெல்மெட் அணியாமல் ஜாலியாக சென்றுள்ளார். ஐந்து மாதத்திற்கு முன்பு சம்பவம் நடந்துள்ளது. இன்று வரை பைக்கை அவரால் மீட்க முடியவில்லை..
சென்னை பாரிமுனை தம்புசெட்டி தெருவில் கடந்த ஜூலை மாதம் 16-ந்தேதி பைக் ஒன்று திருட்டு போனது. இந்த பைக் சென்னை மண்ணடியில் வசிக்கும் மத்திய அரசு உயர் அதிகாரிக்கு சொந்தமானது ஆகும். தனது இருசக்கர வாகனம் தொலைந்தது குறித்து மத்திய அரசு அதிகாரி, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மோட்டார் சைக்கிளை எடுத்து சென்ற நபரை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.
அதில் இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர், பாரிமுனை வழியாக கொடிமர சாலை, நேப்பியர் பாலம், மெரினா, கலங்கரை விளக்கம், சாந்தோம், அடையார், திருவான்மியூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலை வரை செல்கிறார். 'ஹெல்மெட்' அணியாமல் ஜாலியாக சென்ற அவர், வாகன சோதனை எதிலும் சிக்கவில்லை.. போலீசார் பல இடங்களில் வாகன சோதனை நடத்துவார்கள் என்கிற நிலையில், எங்காவது ஒரு இடத்தில் சோதித்து இருந்தால் சிக்கியிருப்பார் என்று ஆதங்கப்படும் மத்திய அரசு ஊழியர், ஐந்து மாதங்களாக போலீசார் தனது வாகனத்தை கண்டுபிடிக்காததால் வேதனையில் இருக்கிறார். இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்..

Related Post