டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தற்போது டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் அதிமுக்கியமான முடிவுகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நாளை முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த கூட்டத் தொடர் நடைபெறும். இந்த சிறப்பு கூட்டத் தொடரை கூட்டியதன் பின்னணியில் ஏதோ ஒரு மறைமுக திட்டம் இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
இந்நிலையில் இன்று திடீரென பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூடியுள்ளது. தற்போது தொடங்கி இருக்கும் இந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் அதி முக்கியமான முடிவுகள் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.