வாழையடி வாழை.. வாழையிலை கிடைச்சா விடாதீங்க.. ஆமா, அத்தனை மரமிருக்க, அதென்ன வாழை மரம்

post-img

சென்னை: வாழையடி வாழையாக வாழையை நாம் பயன்படுத்தி வந்தாலும், சுபநிகழ்ச்சிகளிலும், துக்க நிகழ்ச்சிகளிலும் வாழைமரம் ஏன் கட்டிவைக்கிறோம் தெரியுமா?


வாழையிலைக்கன்று எத்தனையோ அறிவியல் பண்புகள் உள்ளன.. எத்தனையோ மருத்துவ குணங்களும் உள்ளன.. வாழையிலையில் சாப்பிடுவது மனித ஆயுளை கூட்டும்.
வாழையிலையில் சூடான உணவுகளை பரிமாறும்போது, அந்த இலையிலுள்ள சத்துக்களெல்லாம், குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதுதான் நம்முடைய ஆயுளை நீட்டிக்க அடிப்படை காரணமாக உள்ளது.


விஷம்: கெட்டுப்போன சாப்பாடாக இருந்தாலும்சரி, அல்லது விஷம் கலந்த சாப்பாடாக இருந்தாலும்சரி, வாழை இலையில் வைத்தால், அந்த இலையின் மேற்புறத்தில் புதிய நிறத்தில் ஒருவித நீர் உற்பத்தியாகி, இலையில் ஒட்டாமல் வடிந்து விடும்.. இதைவைத்தே உணவின் விஷத்தன்மையை அறிந்து கொள்ளலாம்..


அதனால்தான், விருந்துக்கு எதிரியே அழைத்தாலும், தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம் என்று நம்முடைய முன்னோர்கள் சொன்னார்கள்.
வாழை மரங்கள்: அதேபோல, கோயில் திருவிழாக்கள், கல்யாணங்கள், போன்ற இடங்களில் வாழைமரங்களை கட்டி வைப்பது ஏன் தெரியுமா? திருவிழா உட்பட கோயில் பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் திரளுவார்கள்.. முதலுதவிக்காக இந்த பகுதியிலும் வாழையை கட்டி வைப்பார்கள்.. உயிரையும் காப்பாற்றக்கூடியது இந்த வாழை.. அவ்வளவு ஏன், இடுகாட்டுப் பாடையிலும்கூட வாழை மரத்தை கட்டி வைப்பார்கள்.


அதேபோல வீடுகளில், சுபநிகழ்வுகள் நடத்தப்பட்டாலோ அல்லது துக்க வீடுகள் என்றாலோ, வாசற்படியில் வாழையிலையை நட்டுவைப்பார்கள்.. இதற்கு காரணம் என்ன தெரியுமா?


வியர்வை: சுபநிகழ்ச்சி என்றாலே வீட்டுக்கு விருந்தினர்கள் பலரும் திரண்டு வருவார்கள்.. அவர்கள் ஒவ்வொருவரும் விடும் மூச்சு, காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடில் கலந்துவிடும். மேலும், வீட்டில் கூட்டம் அதிகமாகிவிடும்போது, அவர்களின் உடல் உஷ்ணமும், வியர்வையும் சேர்ந்துவிடும். இதனால் மூச்சு அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது..


அதனால்தான், மாவிலை தோரணங்களுடன், வாழை மரங்களையும் சேர்த்து கட்டிவைக்கிறார்கள். இதனால், காற்றில் பரவி இருக்கும் கிருமிகள் அழிவதுடன், அங்கு நிலவும் உஷ்ணத்தையும் வெகுவாக குறைத்துவிடும்.. மற்ற மரங்களும் இதே வேலையை செய்கின்றன என்றாலும்கூட, இந்த வாழை மரத்தை வெட்டினால் ஒரு வாரம்வரை பச்சையாகவே காணப்படும்.. அதனால்தான், அனைத்து மரங்களையும்விட வாழையை நம்முடைய முன்னோர்கள் தேர்ந்தெடுத்தனர்.


வாழையிலை: இதில் இன்னொன்றையும் கவனித்து பார்க்கலாம்.. வெட்டப்பட்டும், அறுபட்டும், கீழே விழுந்த இலைகளும்கூட, ஆக்சிஜனை சில நாட்கள் மெல்ல வெளியிட்டுக்கொண்டே இருக்குமாம்.. அதனால்தான், வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் போன்றவை விரைவில் கெட்டுப்போகாது..


பூக்கடைக்காரர்கள், மார்க்கெட்டுகளில் பூ வாங்கினால்கூட, அதை வாழை இலையில் தான் கட்டித்தருவதன் காரணமும் இதுதான்.. ஆக, எப்படி பார்த்தாலும், இந்த வாழை என்றுமே நம்மை வாழ வைக்கக்கூடியதுதான்.

 

Related Post