அடித்து தூக்கும் கோயம்புத்தூர்..ரியல் கெத்து ! அடுத்தடுத்து வெளியான 3 அறிவிப்புகள்

post-img

கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரண்டு மெட்ரோ ரயில்களின் கட்டுமானப் பணிகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும் என்று அரசு அறிவித்து உள்ளது.2028 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிகபட்சம் 5 வருடத்தில் கோவை - மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவை ஏற்படுத்தப்படும்.

இந்த சேவை 2028க்குள் ஏற்படுத்தப்பட்டால் மற்ற மாநிலங்களில் இருக்கும் இரண்டாம் கட்ட நகரங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் மெட்ரோ சேவை கோவை, மதுரையில் கொண்டு வரப்படும். நினைத்ததை விட இந்த பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை கணியூர் வரையில்தான் முதல் கட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும்.

அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை. மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர், மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னையில் இருப்பது போலவே அதே வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 3 கட்டங்களாக கொண்டு வரப்பட உள்ளது.சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை முதல் கட்ட பணியின் இறுதியில் மெட்ரோ அமைக்கப்படும்.

கோவை முதலீடு: கோவையில் முதலீடுகள் குவிந்து வரும் நிலையில்தான் அங்கே மெட்ரோ பணிகள் தொடங்க உள்ளன. அதிலும் கோயம்புத்தூர் மாவட்டத்தை நோக்கி பல்வேறு முதலீடுகள் கடந்த சில நாட்களில் குவிந்து உள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முக்கியமான முதலீடுகள் கோவையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன்படி

1) கோவை பழமுதிர் நிலையத்தின் முக்கிய பங்குகளை வெஸ்ட்பிரிட்ஜ் நிறுவனம் கடந்த மாதம் 900 கோடிக்கு வாங்கியது.

2) Warburg Pincus நிறுவனம் கடந்த வாரம் 2500 கோடிக்கு கோவையை சேர்ந்த WaterTec இன் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது.

3) இதையடுத்து, ​​முருகப்பா குழுமத்தின் TI நிறுவனம் ஆனது, 160 கோடிகளுக்கு மேல் Electrical Small Commercial Vehicle business (e-SCV) நிறுவனமான ஜெயம் ஆட்டோமொபைல்ஸில் பெரும் பங்குகளை வாங்கி உள்ளது.

இந்த 3 முதலீடுகளும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கோவை: முன்பெல்லாம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்றால் அதில் சென்னையில் மட்டுமே முதலீடுகள் மேற்கொள்ளப்படும். பெயருக்கு சில முதலீடுகள் தென் மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் மேற்கொள்ளப்படும்.

ஆனால் தற்போது நடந்து வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கோவைக்கும், ஓசூருக்கும், சில தெற்கு மாவட்டங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கோவையில் டெக் மஹிந்திரா முறையாக தங்கள் கிளையை துவங்குகிறது. இதன் மூலம் அங்கு 1500 பேருக்கு வேலை கிடைக்கும். அதேபோல் ரோல்ஸ் ராய்ஸ், எச்ஏஎல் இணைந்து IAMPL என்று கூட்டு நிறுவனம் மூலம் விமான உதிரி பாகங்களை செய்ய உள்ளன.

இந்த நிறுவனம் ஓசூரில் தொடங்கப்பட உள்ளது. எல் அண்ட் டி மூலம் 1500 கோடி ரூபாய்க்கு கோவையில் புதிய ஐடி பார்க்க தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த டிரோன் நிறுவனமான கருடா நிறுவனம் 23 கோடி ரூபாய்க்கு தனது கிளையை கோவையில் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

அதேபோல் MWIVEN என்ற நிறுவனம் ஏவுகணை தயாரிப்பு உதிரி பாகங்களை உருவாக்கும் நிறுவனத்தை ஓசூரில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. ENES ஆடை மில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் ஓசூரில் weg நிறுவனத்தின் காற்றாலை உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது.

Related Post