மணிப்பூர் கலவரத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி என்ற சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் பாஜக அரசின் முடிவுக்கு அங்கு வாழும் பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசின் இந்த முடிவை கைவிட வலியுறுத்தி கடந்த மே மாதம் 3- ஆம் தேதி குகி இனத்தவர் அமைதி பேரணியை நடத்தினர். இதனை தொடர்ந்து அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. பேரணிக்கு மறு நாள், அதாவது மே மாதம் 4- ஆம் தேதி, குகி இன மக்கள் அதிகம் வசிக்கும் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் கிராமத்திற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் கலவரத்தில் ஈடுபட்டனர். சுமார் ஆயிரம் பேர் வரையிலான அந்த கும்பல் கொள்ளையடித்ததுடன் கிராமத்திற்கு தீ வைக்க முயற்சித்துள்ளது.
ப்போது தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள கிராம பெண்கள் சிதறி ஓடியுள்ளனர். அதில் 3 பெண்களை பிடித்த வன்முறை கும்பல் அவர்களை நிர்வாணமாக்கி பேரணியாக அழைத்துச் சென்றுள்ளது. இந்த வீடியோ வெளியாகி தற்போது உலகையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அப்பெண்களை அழைத்துச் சென்ற அக்கும்பலை சேர்ந்தவர்கள் அவர்களை மானபங்கப்படுத்தும் காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
நிர்வாணப்படுத்தப்பட்டு பேரணியாக அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் 20 , 40 மற்றும் 50 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் 20 வயது பெண் பொது இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இளம் பெண்ணை காப்பாற்ற வந்த அவரது சகோதரரும், தந்தையும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். நிர்வாணமாக்கப்பட்ட மற்றொரு பெண் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக மே 18- ஆம் தேதி பூஜ்யம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பூஜ்யம் முதல் தகவல் அறிக்கை என்பது, அதிகார வரம்பு இன்றி எந்த காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்படுவதாகும். பின்னர் முதல் தகவல் அறிக்கை, அதிகார வரம்புக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்படும். இதனிடையே, காவல்துறையினர் தான் தங்களை வன்முறை கும்பலிடம் ஒப்படைத்ததாக பாதிக்கப்பட்ட இளம் பெண் கூறியுள்ளார்.
நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அப்பெண், வன்முறைக்கு பயந்து ஓடிய போது, தங்களை தவுபால் காவல்நிலைய காவலர்கள் மீட்டதாகவும், ஆனால் காவல்நிலையத்திற்கு செல்லும் வழியில், மீண்டும் வன்முறை கும்பல் தங்களை பிடித்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார். காவலர்கள் தங்களை வன்முறை கும்பலிடம் விட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ இருப்பதே தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் தெரியாது எனவும் அந்த இளம் பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த கொடூர சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் 32 வயதாகும் ஹுய்ரெம் மெய்தே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்து 77 நாட்களுக்கு பின்னர் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனிடையே முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஹுய்ரெம் மெய்தேவின் வீடு அவரின் கிராமத்தினராலேயே தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு நபரின் வீடும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. பேச்சி அவங் லைக்காய் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ஹுய்ரெம் மெய்தேவின் கைது குறித்தும் அவர் தான் துன்புறுத்தப்பட்ட பெண்ணின் கையை பற்றியிருப்பதையும் அறிந்து அவரின் வீட்டுக்கு தீ வைத்துள்ளனர். இருப்பினும் அவரின் குடும்பத்தினர் அந்த வீட்டில் இல்லை என தெரிகிறது.