டெல்லி: பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை வரும் 30-ந் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. எஸ்டிஎக்ஸ் 1, எஸ்டிஎக்ஸ் 2 ஆகிய 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது இஸ்ரோ.
விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு மையத்தை அமைப்பதில் இஸ்ரோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விண்கலன்களை தனித்தனியாக ஏவி அவற்றை விண்ணில் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எஸ்டிஎக்ஸ் 1, எஸ்டிஎக்ஸ் 2 ஆகிய 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் வெவ்வேறு சுற்று வட்டப் பாதைகளில் இந்த செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு வீச்சில் மேற்கொண்டுள்ளனர்.