இதற்காக காலை கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அங்கே 51 ஆண்டுகளை குறிக்கும் வகையில் 51 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் மலர் தூவ கொடி கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றினார்.
2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் விதமாக இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து உள்ளன. கூட்டத்திற்கு வரும் மக்கள் பலர் நேற்றே இதற்காக மதுரை வந்து சேர்ந்தனர். மதுரையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைப்பார்.
அதன்பின் இன்று காலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கும். அதை தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் தலைவர்கள் உரை நிகழ்த்துவார்கள். 6 மணிக்கு எடப்பாடி பழனிசாமி உரை நிகழ்த்துவார். 7. 30 மணிக்கு முன்பாக நிகழ்வுகள் முடிந்து உணவு வழங்கப்படும்.
இன்று மூன்று வேளையும் சைவம் மற்றும் அசைவ உணவுகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து முடித்துள்ளன. கிட்டத்தட்ட 3 ஆயிரம் சமையல் கலைஞர்கள் சேர்ந்து இந்த முறை உணவு தயார் செய்துள்ளனர்.
அதிமுக மாநாடு: அதிமுக 2.0 இது உணர்த்தும் விதமாக, அதிமுகவை தான் கைப்பற்றிவிட்டோம் என்பதை உணர்த்தும் விதமாக மதுரையில் அவர் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பொதுக்கூட்டத்தை அவர் மதுரையில் நடத்தவும் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம். எடப்பாடி என்றால் கொங்கு மண்டல தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது. அதை உடைக்க எடப்பாடி நினைக்கிறாராம்.
ஓ பன்னீர்செல்வம் காரணமாக முக்குலத்தோர் அப்செட் ஆக கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை அவர் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆர்பி உதயகுமார் ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் மட்டுமின்றி திமுக, பாஜகவும் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த கூட்டம் இருக்க போகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அதிமுக தனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவும் முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள். முக்கியமாக முக்குலத்தோர் ஜாதியினரை ஓ பன்னீர்செல்வத்திடம் இருந்து பிரித்து தங்களிடம் கொண்டு வர இவர்கள் திட்டமிட்டு உள்ளனராம். 3 லட்சம் தொண்டர்கள் நாற்காலிகளில் அமரும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 7.45 மணிக்கு எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். 3,000 அதிமுக தொண்டர்கள் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்க உள்ளனர்.
2024 லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தயாராக தொடங்கிவிட்டன. தமிழ்நாடு முழுக்க தேர்தல் ஏற்பாடுகள் திமுக மூலம் செய்யப்பட்டு வரும் நிலையில் அதிமுக சார்பாக தற்போது பொதுக்கூட்டம் வழியாக தேர்தல் ஏற்பாடுகள் நடக்க உள்ளன. பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் தொடங்கிவிட்ட நிலையில்தான் அதிமுக தற்போது பொதுக்கூட்டம் மூலம் தேர்தல் களத்தில் குதித்து உள்ளது.