சிறப்பு ரயிலில் வந்த பயணிகளில் 8 பேருக்கு காயம்..

post-img

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த தமிழக பயணிகள் 137 பேர் இன்று அதிகாலை சிறப்பு ரயில் மூலம் சென்னை திரும்பினர். அவர்களை நேரில் சென்று அமைச்சர் ம.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஒடிசாவில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு இரவு சிறப்பு ரயில் சென்னை வரும் சென்று சொல்லப்பட்ட்டது.

                                   8 of the passengers who came in the special trains were injured : Minister Ma Subramanian

உடனடியாக முதல்வர் மு.க ஸ்டாலின், வருவாய்துறை அமைச்சரையும் சுகாதாரத்துறையும் உடனடியாக இங்கு வர சொல்லி தேவையான உதவிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தினார்கள். அதன்படி, வருவாய் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வந்துள்ளனர். மக்கள் நல்வாழ்வுத்துறையும் காயம் அடைந்து வருவர்பவர்களை கண்காணித்து சிகிச்சை அளிக்க முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.

அதன் அடிப்படையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, கேம்சி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை என 6 மருத்துவமனைகளிலும் 207 படுக்கைகளை தயார் நிலையில் வைத்து இருந்தோம். விபத்துக்கு உள்ளானவர்கள் வந்தால் அவர்களை கண்காணிக்கவும் சிகிச்சை அளிக்கவும் 305 மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டு இருந்தார்கள்.

அந்த வகையில், செண்ட்ரல் மருத்துவமனையில் மட்டும் 36 மருத்துவர்கள், 30 மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் செண்டிரலில் காத்திருக்கிறார்கள். ரயிலில் வந்தவர்கள் 137 பேர். இதில் 8 பேர் காயம் அடைந்து வந்துள்ளனர். அதில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவர்கள். 2,3 பேர் வேறு மாநிலங்களை சேர்ந்ந்தவர்கள். கார்த்திகேயன் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுத்து இருக்கிறார்கள்.

வந்து இருக்கும் பயணிகளை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தேவையான முதல் உதவி சிகிச்சை அளித்து, பேருந்துகளில் அவர்வர் ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காயம் அடைந்த 8 பேருக்கும் லேசான காயங்கள் தான் உள்ளது. சென்னை விமான நிலையத்திலும் மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது. விமானங்கள் மூலம் யாரும் வந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழந்ததாக இதுவரை தகவல் இல்லை. அமைச்சர் உதயநிதி சம்பவம் நடைபெற்ற இடத்திற்கே சென்றுள்ளார். ரயில்வே நிர்வாகத்துடன் தமிழக குழு தொடர்ந்து பேசி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் உயிர் பாதிப்பு இருப்பதாகவோ.. பெரிய அளவில் காயத்துடன் சிகிச்சை பெறுவதாகவோ தற்போது வரை தகவல் இல்லை. தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். அப்படி எதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Related Post