பொங்கலுக்கு ட்ரெஸ் எடுக்க போறீங்களா.. வெளியே சாப்பிட போறீங்களா? ஜிஎஸ்டியில் இதை எல்லாம் கவனிங்க

post-img
சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் பல வரி முறைகளை மாற்றி உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு செய்யப்பட்ட பெரும்பாலான பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த புதிய மாற்றங்கள் காரணமாக.. உங்களின் அன்றாட வாழ்க்கை எப்படி எல்லாம் பாதிக்கப்படும் என்று இங்கு பார்க்கலாம். 1) பயன்படுத்திய கார்கள், பயன்படுத்திய EVகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும்: GST கவுன்சில் புதிய EV களின் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சியில் பயன்படுத்திய கார்களின் வரி விகிதத்தை தற்போதைய 12% இல் இருந்து 18% ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இருப்பினும், இது வணிக நிறுவனங்களால் விற்கப்படும் கார்களுக்கு மட்டுமே. தனிநபர்கள் ஜிஎஸ்டி இல்லாமல் இதுபோன்ற பயன்படுத்திய கார்களை விற்கலாம். 2) கேரமலைஸ் செய்யப்பட்ட பாப்கார்ன்: கேரமலைஸ் செய்யப்பட்ட பாப்கார்ன் 18% ஜிஎஸ்டியை ஈர்க்கும், அதே சமயம் உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்த 'ரெடி-டு-ஈட் பாப்கார்ன்', பேக்கேஜ் செய்யப்பட்டு பாப்கான்களுக்கு தற்போது 5% ஜிஎஸ்டி உள்ளது. இது 12% ஆக உயர்த்தப்படும். மற்ற சாதாரண பாப்கான்களுக்கு 5% விதிக்கப்படும். 3) செறிவூட்டப்பட்ட அரிசி மீதான வரியை 5 சதவீதம் ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. முன்பு இதன் மீதான வரி 18% ஆக இருந்தது. குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய நீண்ட கால ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு GST விலக்கு அளிக்க GoM பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி விகிதங்களை முறைப்படுத்துவதற்காக ஜிஓஎம் குழு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ஜவுளி உட்பட 150 பொருட்கள் மற்றும் சேவைகளை மறுசீரமைக்க பரிந்துரைத்து உள்ளது. புகையிலை மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களுக்கு தற்போதுள்ள 28 சதவீதத்திற்கு (இழப்பீட்டு செஸ் தவிர்த்து) பதிலாக 35 வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவும் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஜவுளிப் பொருட்களுக்கான விலை ₹1,500 வரை இருந்தால் அதற்கு 5% வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதன் மாற்றம் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ₹1,500 முதல் ₹10,000 வரை விலையுள்ள பொருட்களுக்கு 18 சதவீத வரியை விதிக்க முன்மொழியப்பட்டு உள்ளது. ₹10,000க்கு மேல் உள்ள ஜவுளிகளுக்கு, 28 சதவீதமாக வரி விதிக்க விதி கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதன் மாற்றம் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் இப்போது பொங்கலுக்கு உடை எடுப்பதில் கூடுதல் வரி இருக்காது. ஆனால்.. ஜனவரி இறுதி நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். உயர்தர கைக்கடிகாரங்கள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட பல ஆடம்பரப் பொருட்களின் மீதான GST விகிதங்களை உயர்த்த GoM பரிந்துரை செய்தது . ₹25,000க்கு மேல் விலையுள்ள கைக்கடிகாரங்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்க GoM முன்மொழிந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், ₹15,000க்கு மேல் விலையுள்ள ஷூக்களும் வரி உயர்வு விதிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இந்த வரி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாம் இப்போது உயர்த்தப்படவில்லை. ஜனவரி மாதம் உயர்த்தப்படும். ₹10,000க்கும் குறைவான விலையுள்ள சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க GoM முன்மொழிந்துள்ளது. காற்று நிரப்பப்பட்ட பானங்கள், சிகரெட்டுகள், புகையிலை மற்றும் தொடர்புடைய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை தற்போதைய 28 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்ட உள்ளது. இதன் மீதான முடிவுகளும் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Related Post