நடிகை வனிதா கொடுத்த காதல் அப்டேட்.. மகளை வைத்து செம பிளான்..

post-img

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகளின் புகைப்படத்தை வெளியிட்டு காதல் குறித்த ஒரு விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய மகள் விரைவில் கதாநாயகியாக அறிமுகமாவார் என்ற அப்டேட் கொடுத்திருந்த நிலையில் தற்போதைய பதிவு ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் வனிதா வெளியிட்ட பதிவுக்கு அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரபலங்களின் மகளாக இருந்த வனிதா, விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து திருமண பந்தத்தில் நுழைந்த வனிதா அதற்குப் பிறகு சில வருடங்களாக நடிப்பை விட்டு விலகி இருந்தார். 19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா பிறகு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
அதைத்தொடர்ந்து ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த வனிதா 2010 ஆம் ஆண்டு அவரையும் பிரிந்து விட்டார். பிறகு வனிதாவிற்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில் மகன் அவருடைய தந்தையோடு போய்விட்டார். இந்த நேரத்தில் தான் இயக்குனர் பீட்டர் பாலை காதலிக்கும் விஷயத்தை சொல்லி, மகள்கள் முன்பு திருமணம் செய்திருந்தார். பிறகு சில நாட்களில் பீட்டர் பாலை பிரிந்து விட்டதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை வனிதாவின் மகள் சினிமாவில் நடிகர் விஜய்யின் மகனோடு நடிக்கப் போகிறாரா? என்று பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருந்தது. விஜய் மற்றும் வனிதா கூட்டணி போல தற்போது புதிய தலைமுறை கூட்டணியும் அமைந்தால் நன்றாக இருக்கும் என்றும் பலர் கருத்து கூறி வந்தனர். அதே நேரத்தில் தற்போது விஜய்யின் மகன் நடிக்கப்போவதில்லை என்று சொல்வது போலத்தான் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு அத்தோடு, "நாம் காதலித்த 90s களின் காதல் எங்கே..? சீக்கிரம் ஏதாவது அழகாக இருக்கும்" என்று நம்புகிறேன் என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் அப்போ நடிகை வனிதாவின் மகள் 90ஸ் காதல் கதையை மையப்படுத்திய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாரா? என்ற கேள்விகள் எழும்பி வருகிறது.
அதே நேரத்தில் நடிகை வனிதா புதியதாக ஏதேனும் காதலில் விழுந்து விட்டாரா? அதனால் தான் இப்படி ஒரு அப்டேட் கொடுத்து இருக்கிறாரா? அதுவும் விரைவில் தெரியவரும் என்று சொல்லி இருக்கிறாரே..! என்னவாக இருக்கும்? என்று பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது. ஆனால் இதுவரைக்கும் ரசிகர்களின் கேள்விகளுக்கு வனிதா எந்த பதிலும் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மயூக்காக பாக்யா செய்த செயல்.. மனம் மாறும் ராதிகா.. கோபத்தில் ஈஸ்வரி.. பரபரப்பான தருணம்

Related Post