சென்னை: ஜோஹோ நிறுவனத்துக்கு சர்வீஸ்களை வழங்கி வரும் நிறுவனத்தில் இருந்து ஜோஹோ டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு அனுபவம் எதுவும் வேண்டாம். டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் தேர்வாகும் பட்சத்தில் கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஜோஹோ நிறுவனத்தின் பார்ட்டனர் கம்பெனியான எலைட் டெக் பார்க் உள்ளது. இந்த எலைட் டெக் பார்க் சார்பில் ஜோஹோ நிறுவனத்துக்கு பல்வேறு சர்வீஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் எலைட் டெக் பார்க் சார்பில் ஜோஹோ டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் முழு விபரம் வருமாறு:
எலைட் டெக் பார்க் சார்பில் காலியாக உள்ள ஜோஹோ டெவலப்பர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு இளநிலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது தொடர்புடைய துறையில் டிகிரி படிப்பை 2019 முதல் 2024ம் ஆண்டுக்குள் முடித்திருப்பவர்கள் விண்ணப்பம்செய்யலாம். அதோடு 0 - 1 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி பணி அனுபவம் இல்லாதவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இருப்பினும் அவர்களுக்கு சில தகுதிகள் வேண்டும். அதன்படி JavaScript, Node.js உள்பட பிற புரோகிராமிங் லேங்குவேஜ்களில் Coding எழுத தெரிந்திருக்க வேண்டும். லாஜிக்கல் திங்கிங் மற்றும் ப்ராப்ளம் சால்விங் திறமை இருக்க வேண்டும். அதேபோல் REST APIs, data structures மற்றும் JSON உள்ளிட்டவற்றில் அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்.
மேலும் கிரியேட்டி்ங் எக்ஸ்டென்சன்ஸ் அல்லது மார்க்கெட்பிளேஸ் செயலி (Preferred) அனுபவம் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நல்ல கம்யூனிகேஷன் திறமை இருப்பதோடு Collaborative Attitude இருக்க வேண்டும். இதுதவிர மலையாளம், ஹிந்தி மொழி தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்ட்டாகும்.அதோடு புதிய தொழில்நுட்பங்களை கற்கும் ஆர்வம் இருப்பதோடு, பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் உடனடியாக இணைய வேண்டும்.
ஒருவேளை மலையாளம், ஹிந்தி தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இந்த பணிக்கு மலையாளம், ஹிந்தி தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமில்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி முழுக்க முழுக்க ஜோஹோ நிறுவனத்தின் சர்வீஸை சார்ந்து தான் அமைகிறது. இந்த பணியில் சேர்ந்து அனுபவம் பெறுவோரால் எளிதாக ஜோஹோ நிறுவனத்துக்குள் நுழைய முடியும்.
தற்போது பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த அறிவிப்பில் மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Elite Tech Park நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். டிசம்பர் 20ம் தேதி இந்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விரைவில் விண்ணப்பத்துக்கான காலக்கெடு முடிவுக்கு வரலாம் என்பதால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிப்பது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here