10 பிரிவில் வேலை.. காக்னிசண்ட் தரும் அசத்தலான வாய்ப்பு.. ஆன்லைனில் டிச.,18 ல் இண்டர்வியூ

post-img
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து 10 பிரிவில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ ஆன்லைனில் டிசம்பர் 18 ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் காக்னிசண்ட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் நாடு முழுவதும் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: தற்போது காக்னிசண்ட் நிறுவனத்தில் 10 பிரிவுகளுக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி 1.Pyspark+Python+Sql 2.Python+Snowflake 3.GraphDB+Neo4J 4.Databricks+Hadoop 5.Airflow Apache 6. Hadoop - Bigdata/Kafka Admin 7.Spark Scala 8.Palantir Python 9.Informatica IDMC, Informatica PC + OCI, PL/SQL and SQL,Unix Shell scripting 10. Informatica IDMC, Informatica PC + ETL Tester உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இப்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்பட உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது டிசம்பர் 18 ம் தேதி Virtual முறையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். டிசம்பர் 18 ம் தேதி இண்டர்வியூ என்பதால் அதற்கு முன்பாகவே விண்ணப்பம் செய்வது நல்லது. இது ஒரு PAN India பணியாகும். இதனால் தேர்வாகும் நபர்கள் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னையிலும் கூட வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கலாம். பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post