சென்னையிலேயே ஐடி பணி.. டிகிரி மட்டுமே போதும்.. HCL தரும் சூப்பர் வேலைவாய்ப்பு

post-img
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனம் சார்பில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் (HCL or HCL Technologies) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் Process Associate - Fresher பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதாவது கஸ்டமர் சர்வீஸ் ரிப்ரெஷ்சென்டேட்டிவ் ரோலாகும். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சட்டப்படிப்பு, பிடெக், எம்டெக், பிசிஏ, எம்சிஏ படித்தவர்கள் மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டாம். மேலும் டைப்பிங் ஸ்கில்ஸ் நன்றாக இருக்க வேண்டும். அதேபோல் நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதேபோல் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக உடனடியாக பணியில் சேர தயாராக இருக்க வேண்டும். அதாவது இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றி வருவோர் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கு பணிக்கு தேர்வாகும்போது குறுகிய காலத்தில் பணியில் இணைய தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஊழியர்களுக்கு Two Ways Cabs வசதி என்பது உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் CV-யை shine.albert@hcltech.comக்கு அனுப்பி வைக்க வேண்டும். பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post