வேலூர்: வேலூர் அப்துல்லாபுரத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் டிசம்பர் 20-ந்தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த முகாமில் 40-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் 10, 12, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்துவகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த முகாமில் 40-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் 10, 12, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
தனியார் துறை பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் 20-ந் தேதி காலை 10 முதல் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்" இவ்வாறு கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
இதேபோல் நாமக்கல் மாவட்டடத்திலும் வரும் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தனியார் துறை நிறுவனங்களும்,- தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடக்கிறது.
அதன்படி, இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும், 20 காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. தனியார் துறை நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்ட் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர், பிளஸ் 2, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பயிற்சி மற்றும் கணினியியல் (ஜாவா, டேலி) முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும், இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும், ஆலோசனையும் வழங்கப்படும். விபரங்களுக்கு, 04286 -222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.