திருச்சிக்கு வரப்போகும் TATA நிறுவனம் எது? வேலைவாய்ப்பும், முதலீடும் வேற லெவல்..!

post-img

TATA Projects என்பது டாடா குழுமத்தின் கட்டுமான நிறுவனம் மட்டுமே என்பதால் இப்பகுதியில் எந்த நிறுவனம் வரப்போகிறது என்பதில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.  

டாடா குழுமம் மணப்பாறை சிப்காட்-ல் OSAT தொழிற்சாலை அமைந்தால் குறைந்தது 4- 5 பில்லியன் டாலர் முதலீடு செய்யும். இதுவே எலக்ட்ரானிக்ஸ், EV பேட்டரி தொழிற்சாலை எனில் 1-2 பில்லியன் டாலர் முதலீட்டை அடுத்த 5 வருடத்தில் எதிர்பார்க்க முடியும்.

டாடா குழுமத்தின் டாடா மோட்டார் எலக்ட்ரிக் வாகன பிரிவில் உச்சத்தில் இருப்பது மட்டும் அல்லாமல் ஆதிக்கமும் செலுத்தி வருகிறது, இந்த நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதற்கான புதிய உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க முடியும். ஆனால் சென்னையில் போர்டு தொழிற்சாலை-க்கு இன்னும் முடிவு எட்டப்படாமல் இருக்கும் வேளையில் டாடா குழுமத்திற்கு சென்னை தொழிற்சாலை கிடைத்தால் ஜாக்பாட். இதனால் மணப்பாறை சிப்காட்-ன் 283 ஏக்கரில் ஆட்டோமொபைல் நிறுவனம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

எலக்ட்ரிக் வாகன பிரிவில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் டாடா குழுமம் அதன் உற்பத்தியை அதிகரிக்க எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தொழிற்சாலையை அமைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இப்பிரிவு வர்த்தகத்திற்காக ஏற்கனவே தனி நிறுவனத்தை உருவாக்கி சிஇஓ அறிவித்துள்ளது டாடா குழுமம். சமீபத்தில் தமிழ்நாடு அரசு EV துறையில் 6 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்க்க திட்டம் தீட்டியது குறிப்பிடத்தக்கது.

டாடா குழுமம் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை மணப்பாறை சிப்காட் பகுதியில் அமைக்கும் என பலரும் கூறப்படும் வேளையில், இதற்கான வாய்ப்புகள் 50:50 தான். டாடா குழுமம் தனது TATA OSAT தொழிற்சாலையை கூட்டணி இல்லாமல் துவங்க முயற்சி செய்து வருவதால் தாமதம் அதிகமாகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் மைக்ரான் இந்தியாவில் OSAT பிரிவுக்காக 3 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மைக்ரான் இந்தியாவில் தனியாக முதலீடு செய்து OSAT தளத்தை அமைக்க போகிறதா அல்லது கூட்டணியில் அமைக்க போகிறதா என தெரியவில்லை. இந்த நிலையில் டாடா - மைக்ரான் கூட்டணியில் OSAT தொழிற்சாலை அமைந்தால் மணப்பாறை சிப்காட்-ல் செமிகண்டக்டர் தொழிற்சாலை வர வாய்ப்புகள் அதிகம், இதேவேளையில் டாடா குழுமம் தனியாக OSAT தொழிற்சாலையை அமைத்தால் திறமையான ஊழியர்களை ஈர்க்க பெரு நகரங்களில் அமைக்கவே வாய்ப்புகள் அதிகம்.

கடைசியாக டாடா குழுமம் தற்போது எலக்ட்ரானிகஸ் பொருட்கள் உற்பத்தியில் தீவிரமாக இருக்கும் வேளையில் ஒசூர் தொழிற்சாலையை முழுவதுமாக ஐபோன் உற்பத்திக்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு இணையாக பெங்களூரில் இருக்கும் விஸ்திரான் தொழிற்சாலையை டாடா குழுமம் கைப்பற்றும் திட்டம் நடந்து வருகிறது. இதனால் மணப்பாறை சிப்காட் பகுதியில் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமையவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மணப்பாறை சிப்காட் நிலத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் கைப்பற்றியுள்ளதால் இந்த பகுதியில் எந்த நிறுவனம் வரும் என்பதில் பெரும் குழப்பம் உள்ளது. டாடா குழுமத்தின் நிர்வாகமும் இப்பகுதியில் எந்த தொழிற்சாலை வரும் என்பதிலும், எவ்வளவு முதலீடு செய்யும் என்பதையும் தெரிவிக்கவில்லை.

டாடா குழுமம் மணப்பாறை சிப்காட்-ல் OSAT தொழிற்சாலையை அமைந்தால் குறைந்தது 4- 5 பில்லியன் டாலர் முதலீடு செய்யும். இதுவே எலக்ட்ரானிக்ஸ், EV பேட்டரி தொழிற்சாலை எனில் 1-2 பில்லியன் டாலர் முதலீட்டை அடுத்த 5 வருடத்தில் எதிர்பார்க்க முடியும்.

மேலும் உற்பத்தி துறை நிறுவனங்கள் வருமாயின் குறைந்தப்பட்சம் 10000க்கும் அதிகமானோர்-க்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Related Post