சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸில் இருந்து சென்னை, கொச்சி, புனே, பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
டிசிஎஸ் (TCS or Tata Consultancy Services)என்பது நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனத்தில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போதைய அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் Java Full Stack Developer (Angular) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 6 முதல் 10 ஆண்டு ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதன்படி ஜாவா/ஜே2இஇ, ஸ்பிரிங், ஏபிஐ, Maven, Oracle, Sonar, git உள்ளிட்டவற்றில் 6 முதல் 10 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஜாவா ஸ்கிரிப்ட், எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஆங்குலர் பிரேம்வொர்க் தெரிந்திருக்க வேண்டும். ஜாவார், ஜாவா த்ரெட்ஸ், ஜாவா கலெக்சன் மற்றும் டிசன் பேட்டர்ன்ஸ், அவர் ஆப் கொட்லின் உள்ளிட்டவற்றில் ஆழ்ந்த அறிவை பெற்றிருக்க வேண்டும்.
ஸ்பிரிங் பேட்ஸை பயன்படுத்தி ஜாவா பேட்ச்சில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். Junit, REST Assured,Mockito, Wiremock, MockMVC உள்ளிட்டவை அறிந்திருக்க வேண்டும். டேட்டாபேஸ் அனுபவத்தில் எஸ்க்யூஎல் மற்றும் NoSQL தெரிந்திருக்க வேண்டும். Groovy Scripts எழுத தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர மேலும் சில முக்கிய தகுதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி மாதம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது பற்றி தற்போது எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட 6 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை, கொச்சி, புனே, பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here