அனுபவம் தேவையில்லை.. ஏதாவது ஒரு டிகிரி போதும்.. IBM ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு

post-img
சென்னை: ஐபிஎம் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்து, பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பம்செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஐபிஎம் செயல்பட்டு வருகிறது. International Business Machines Corporation என்பது தான் சுருக்கமாக IBM என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் நம் நாட்டில் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. பெங்களூர், கொச்சி உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஐபிஎம் நிறுவனம் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது ஐபிஎம் நிறுவனத்தில் இருந்து தற்போது சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு என்ட்ரி லெவல் பணியாகும். இதனால் பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். இதுதவிர டெக்னிக்கல் மற்றும் புரோபஷனல் ஸ்கில்ஸ் என்று பார்த்தால் Agile Software Development, Terraform Automation, Ansible Automation, Bash/Shell Scripting பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருப்பதோடு, நல்ல கம்யூனிகேஷன் திறமை கொண்டிருக்க வேண்டும். அதேபோல் Preferred டெக்னிக்கல் மற்றும் புரோபஷனல் ஸ்கில்ஸ் என்று Source Control/GitHUb, Continuous Delivery/ Continuous Integration, NodeJS, NPM, ReactJS உள்ளிட்டவை வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பணிக்கான மாதசம்பளம், ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யபடலாம். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். இது ஒரு ஃபுல்டைம் வேலையாகும். அலுவலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டியிருக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் IBM இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய கடைசி நாள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப காலக்கெடு முடிவுக்கு வரலாம். இதனால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post