டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட், டெக்னிசியன், லேபரட்டரி அட்டண்டட் ஆகிய பணியிடங்களுக்கு 79 பேர் நியமிக்கப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பக்க வேண்டும்.
நிர்வாகம் : மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் (ICMR-National Institute of Malaria Research)
மேலாண்மை : மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
பணியிடம்: டெல்லி
மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை : 79
பணி விவரம்
Technical Assistant T
echnician I
Laboratory Attendant I
விண்ணப்பிக்கும் முறை
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பிழையின்றி பூர்த்தி செய்து அதனுடன் கோரப்பட்ட சான்றிதழ்களை இணைத்து அஞ்சல் வாயிலாக, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பிக்க விருப்புபவர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு, சலுகை உள்ளிட்ட முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக படித்து அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.300க்கு டி.டி., எடுத்து இணைத்து அனுப்ப வேண்டும்.
கல்வித்தகுதி
விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் BE / B Tech / Bachelor Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எலக்ட்ரிகல் என்ஜினியரிங் படித்தவர்கள் ஒவ்வொரு விதமான பணிக்கும் கல்வித்தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
அதுகுறித்து அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.
ஊதியம் ஒவ்வொரு பணிக்கு ஏற்றவாறு, மாத ஊதியம் வேறுபடுகிறது.
Technical Assistant - ரூ.35,400-1,12,400 (Pay Level -6)
Technician I - ரூ.19,900-63,200 (Pay Level-2)
Laboratory Attendant I - ரூ.18,000- 56,900
நோட் பண்ணுங்க...!
Technical Assistant -26
Technician I - 49
Laboratory Attendant I - 4
மறந்துடாதீங்க ...!