கோவை: கோவையில் உள்ள அருள்மிகு பட்டிசுவரசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி என்ன? யார் யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுக்க உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் காலியாக இருக்கும் நிர்வாக பணியிடங்களுக்கு உரிய அறிவிப்பினை வெளியிட்டு இந்து சமய அறநிலையத்துறை நிரப்பி வருகிறது.
அந்த வகையில் தற்போது கோவையில் உள்ள பட்டீஸ்வரர் கோயிலில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு ஆகியவற்றை பார்க்கலாம்..
பணியிடங்கள் விவரம்:
1. இளநிலை உதவியாளர் - 02
2. டிக்கெட் விற்பனை கிளர்க் - 01
3. ரெக்கார்டு கிளர்க் (பதிவு எழுத்தர்) - 01
4. தூய்மை பணியாளர்கள் - 01
என மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: இளநிலை உதவியாளர் ,டிக்கெட் விற்பனை கிளர்க், ரெக்கார்டு கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் குறைந்தபட்ச கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் தமிழில் எழுதவும் படிக்க தெரிந்து இருந்தால் போதும்.
வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?:
1. இளநிலை உதவியாளர் - ரூ.18,500 - 58,600/-
2. டிக்கெட் விற்பனை கிளர்க் - ரூ.18,500 - 58,600/-
3. பதிவு எழுத்தர் - ரூ.15,900 - 50,400/-
4. தூய்மை பணியாளர்கள் - ரூ.10,000 - 31,500
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். மெரிட் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை கோயில் அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும். விண்ணப்பிக்க வரும் 03.01.2025 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ் காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில்,
பேரூர், பேரூர் வட்டம்
கோவை மாவட்டம் - 641010.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://perurpatteeswarar.hrce.tn.gov.in/