சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான கேப்ஜெமினியில்(Capgemini) இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 26 கடைசி நாளாகும். தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதுடன், ரூ.25 ஆயிரம் இன்செட்டிவ் வழங்கப்பட உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக Capgemini (கேப்ஜெமினி) செயல்பட்டு வருகிறது. பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் நம் நாட்டில் பெங்களூர், மும்பை, புனே, சென்னை உள்பட பல இடங்களில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் தான் கேப்ஜெமினியில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
கேப்ஜெமினி நிறுவனத்தில் Capgemini Exceller 2024 off campus V & V Automation என்ற பெயரில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி Verification & Validation Automation Testing - SDET (Fresher Profile) பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சியில் கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி, பிசிஏ முடித்திருக்க வேண்டும்.
அதேபோல் ஜாவா, பைத்தான், சி# உள்ளிட்ட புரோகிராமிங் லேங்குவேஜ்ஜில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். அதேபோல் டெஸ்ட் ஆட்டோமேஷன் பிரேம்வொர்க்ஸ்களான செலேனியம் (Selenium), டெஸ்ட் என்ஜி (TestNG), ஜேயூனிட் (Junit), அபியம் (Appium) உள்ளிட்டவற்றில் நல்ல அறிவை பெற்றிருக்க வேண்டும். மேலும் சாப்ட்வேர் டெஸ்ட்டிங் கான்ஸ்செப்ட்டுகளான SDLC, STLC உள்ளிட்டவை பற்றிய அடிப்படை புரிதலை வைத்திருக்க வேண்டும். அதேபோல் CI/CD டூல்ஸ்களான Jenkins, GitLab, பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் டீபக்கிங் ஸ்கில்ஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் APIs மற்றும் Postman for API Testin, எக்ஸ்போஷர் டூ டேட்டாபேசஸ் மற்றும் எஸ்க்யூஎல் ஃபார் வேலிடேட்டிங் டெஸ்ட் டேட்டா தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர நல்ல கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மற்றும் டீம்வொர்க்காக பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். புதிய டெக்னாலஜியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு ஆண்டு சம்பளமாக ரூ.3 லட்சம் வழங்கப்பட உள்ளது. அதோடு ஒன் டைம் இன்செட்டிவ்வாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். . பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள கேப்ஜெமினி நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Capgemini நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 26 ஆகும். அன்றைய தினம் நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதனால் அதற்கு முன்பே விண்ணப்பிப்பது நல்லது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு Active DigiLocker அக்கவுண்ட் கண்டிப்பாக்க இருக்க வேண்டும். மேலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here