கோயம்புத்தூர் மக்கள் கொண்டாட்டம்.. மஹிந்திரா குரூப் முக்கிய அறிவிப்பு..!

post-img

தமிழ்நாட்டின் முக்கிய முதலீட்டு பகுதியாக மாறிவரும் கோயம்புத்தூர் தற்போது பெரு நிறுவனங்களின் முக்கிய டார்கெட் ஆக மாறியுள்ளது. சென்னை போலவே கோயம்புத்தூர்-ம் சேவை மற்றும் உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும் காரணத்தாலும் அனைத்து துறைக்கு தேவையான திறன்வாய்ந்த ஊழியர்களும் இப்பகுதியில் கிடைப்பதால் இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும் கோயம்புத்தூரில் முதலீடு செய்ய துவங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய கார்களின் முக்கிய பணிகளை செய்வதற்காக கோயம்புத்தூர்-ஐ தேர்வு செய்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் துறை எப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் மஹிந்திராவின் இப்புதிய அறிவிப்பு அதன் எதிர்காலத்தை பிரகாசமாக்கியுள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா கோயம்புத்தூரில் சாப்ட்வேர் டைபைன்ட் வாகனங்களுக்காக R&D அதாவது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தை புதிதாக அமைத்துள்ளது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் 2.0 வளர்ச்சி சென்னை அலுவலகத்தில் இருந்து உருவாகிய நிலையில் அடுத்த 50 வருடத்திற்கான வளர்ச்சி மற்றும் உயர்நாடியை கோயம்புத்தூரில் உருவாக்கி வருகிறது.

சாப்ட்வேர் டைபைன்ட் வாகனங்கள் என்றால் என்ன..? 20 வருடங்களுக்கு முன்பு கார்களில் சாப்ட்வேர் என்பது மிகவும் சிறிய அளவில் அதுவும் ஆடம்பர கார்களில் மட்டுமே இருக்கும். ஆனால் இன்று காரில் சீட் அட்ஜெஸ்ட் செய்வது முதல் வின்ஷீல்ட் வைப்பர் ஆன் செய்வது வரையில் அனைத்தும் சென்சார், எலக்ட்ரானிக் கருவிகள் மூலம் இயங்குகிறது. ஒவ்வொரு எலக்ட்ரானிக் கருவிக்கு பின்பும் ஒரு சாப்ட்வேர் இயங்கி வருகிறது.

இந்த மாற்றத்தை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பழைய ஸ்கார்பியோ கார்-க்கும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள XUV700 மற்றும் Scorpio N கார்களுக்கான வித்தியாசம் மூலம் கணக்கிட முடியும். தற்போது கார்களின் அதிகப்படியான ECU இயங்கி வருகிறது இதன் எண்ணிக்கையை குறைக்கவும், சாப்ட்வேர் வாயிலாக வாகனத்தின் திறன், அனுபவம், சேவைகளை வழங்க வேண்டும் என்பதற்காக கார்களில் Centralisation of software என்ற கான்செப்ட் ஆட்டோமொபைல் சந்தையில் உருவாகியுள்ளது.

கார்களில் Centralisation of software-க்கு தற்போதைய சரியான உதாரணம் டெஸ்லா கார்கள். இதை தனது கார்களுக்கும் கொண்டு வரும் முயற்சியாக சாப்ட்வேர் சேவைகளை வெளியில் இருந்து வாங்காமல் சொந்தமாக உருவாக்க மஹிந்திரா software-defined வாகனங்களுக்கான புதிய R&D Centre கோயம்புத்தூரில் அமைக்கப்பட உள்ளது.

மஹிந்திரா குழுமத்தின் டெக் மஹிந்திரா அலுவலகம் ஏற்கனவே கோயம்புத்தூரில் இருக்கும் காரணத்தால், சென்னை-யில் ஏற்கனவே ஆட்டோமொபைல் R&D தளம் இருக்கும் வேளையில் மென்பொருளுக்காக கோயம்புத்தூர் தேர்வு செய்யப்பட உள்ளது.

Related Post