தென்காசியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரம் இதோ!

post-img

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜூலை 21 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

இம்முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

தென்காசி மாவட்டத்தை சார்ந்த Tvs Training Services Shi Life Insurance, SM Cable network போன்ற முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் முகாமில் கலந்து கொள்கின்றன. மேலும், கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது dcotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கொள்ளப்படுகின்றனர்.

முகாம் நடைபெறும் இடம் :

அலுவலக முகவரியான கதவு எண் 168/2324 முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் ஷோரூம் பின்புறம்) குத்துக்கல்வலசை அஞ்சல் தென்காசி - 627803.

Related Post